Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அண்மைக்காலமாக தொலைக்காட்சியை திருகினாலே ஒரே அழுகுரல், அல்லது அமங்கல வார்த்தைகள், வன்முறைகள், தகாத உறவுமுறை சம்பந்தப்பட்ட‍ தொடர்களே ஒளிபரப்பாகி வருகின்றன• ஆனால் பிற தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கூட்டுக் குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி கடந்தாண்டு அக்டோபர் முதல் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.


இதில் நான்கு சகோதரர்கள், மூத்த‍வர் சத்தியமூர்த்தி, தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு, தன் குடும்பத்தையும் வியாபாரத்தையும் முறைப்படுத்தி உழைத்து ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவருடைய ஒரு தம்பி பெயர் ஜீவா கல்லூரி முடித்து தனது அண்ண‍ன் சத்தியமூர்த்தியுடன் உடன் வியாபாரத்தில் இருந்து வருகிறார். அடுத்த‍ தம்பி கதிர் இவரும் கல்லூரி முடித்து, தனது அண்ண‍ன் சத்தியமூர்த்திக்கு உதவியாக கடையில் இருந்து வருகிறார். கடைக்குட்டி தம்பி, கண்ண‍ன் – வெகுளியான குணம் படைந்த‌ இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களுடைய தாயார் லஷ்மி இவர், பக்க வாதத்தால் தாக்கப்பட்ட நோயாளி. இவர்களுடைய உறவுக்கார பெண் முல்லை.

சத்தியமூர்த்தியின் மனைவி பெயர் தனம், சத்தியமூர்த்தியை திருமண‌ம் முடித்து தனம் இல்ல‍ம் வந்த நாள்முதல் ஜீவா, கதிர், கணணன் ஆகிய மூவரையும் தனது சொந்த குழந்தைகளாக பாவித்து பாசத்தை கொட்டி வளர்த்து வருகிறார்.

ஜீவா, தான் கல்லூரியில் படிக்கும்போதே தன்னுடன் படிக்கும் மீனா என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இதை அறியாத முல்லை, ஜீவா மீது ஒருதலையாக காதலித்து அவனையே திருமணம் முடிக்கும் எண்ண‍த்துடன் இருந்தார். ஜீவாவின் காதலை அறிந்திடாத சத்தியமூர்த்தியும் மற்றவர்களும் ஜீவாவிற்கும் முல்லைக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதனிடையே ஜீவாவிற்கும் மீனாவுற்கும் இருக்கும் காதல் மீனாவின் தந்தை ஜனார்த்தனுக்கு தெரியவர தனது மகளை வீட்டில் வைத்து பூட்டி விடுகிறார். அடுத்து சத்தியமூர்த்தி அழைத்து விவரத்தை சொல்லி கடுமையாக எச்சரித்து அனுப்புகிறார். இந்த பக்க‍ம் ஜீவா தனது காதல் குறித்த வீட்டில் தெரிவிக்க, இதுகுறித்து பேசுவதற்கு ஜீவாவின் அண்ணியும் சத்தியமூர்த்தியின் மனைவியுமான தனம், ஜனார்த்த‍னம் வீட்டிற்கு சென்று பெண் கேட்கிறார் ஆனால் ஜனார்த்த‍னமோ தனத்தை அவமானப்படுத்தி அடித்து விரட்டிவிடுகிறார். இதை அறிந்த ஜீவாவும் கதிரும் ஜனார்த்தன்னை தட்டிகேட்க செல்கின்றனர். இதனை தனம் தடுத்து விடுகிறார்.

ஜீவா-மீனாவின் காதல், தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ள‍தால், தன்னை ஒருதலையாக‌ காதலிக்கும் முல்லையை மணந்து கொள்ள அரைமனத்தோடு ஒப்புக்கொண்டு திருமண ஏற்பாடும் நடக்கிறது. ஆனால் திருமணத்தன்று திடீரென்று மீனா, ஒரு மிகப்பெரிய பிரளயத்தையே உண்டுபண்ணி, ஜீவாவை மணக்கிறார். முல்லையின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகக்கூடாது என்பதால், பெற்றோர் மற்றும் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் வற்புறுத்த‍ல் காரணமாக முல்லை, கதிரை மணக்கிறாள். வற்புறுத்தலின் பேரில் நடந்த திருமணத்தால் இவர்களிடையே எப்போது சண்டைதான்.

தன்னை அவமானப்படுத்திவிட்டு தான் காதலித்த ஜீவாவையே மணந்து கொண்ட மீனாவால், கோவத்தின் உச்சிக்கே சென்ற மீனாவின் தந்தை ஜனார்த்தனன், பாண்டியன் ஸ்டோர்ஸ் வியாபாரத்தை சீர்குலைக்க முயன்று வருகிறார். அதிலிருந்து சத்தியமூர்த்தி, தனது தம்பிகளின் துணையோடு ஜனார்த்த‍னத்தின் தடைகளை உடைத்து வருகிறார்.

துளியும் விருப்ப‍ம் இல்லாமல் மணந்து கொண்ட கதிர்-முல்லை தம்பதி ஒருபுறம், காதலித்து மணந்து கொண்ட ஜீவா-மீனா இவர்கள் மறுபுறம், நாட்கள் செல்ல செல்ல, கதிர்-முல்லை இவர்களிருவருக்கிடையே மெல்ல மெல்ல இப்போதுதான் காதல் அரும்பத் தொடங்கியிருக்கிறது .

ஜீவாவின் மனைவி மீனா, பணக்கார அப்பாவிற்கு மகளாக செல்வச்செழிப்பில் வளர்ந்தவர். ஜீவா வீட்டில் உள்ள‍வர்களின் பழக்கம் வழக்க‍ங்களில் துளியும் விரும்பாதவர், ஆயினும் தான் காதலித்த மணந்து கொண்ட ஜீவாவிற்காக அத்தனையும் பொறுத்துக் கொள்கிறார். சில விஷயங்கள் தவிர, ஆனால் ஜீவாவிடம் புலம்பித் தீர்த்து விடுவார். தனக்கு ஆதரவாக இருக்கும்படி வற்புறுத்துகிறார். ஜீவாவின் வீட்டில் மீனாவினால் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும் போதெல்லாம், ஜீவாவின் குடும்பத்தினர் விட்டுக்கொடுத்து குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் சத்தியமூர்த்தியும் தனமும் உறுதியாக இருந்து பிரச்சினைகளை சமாளித்து வருகின்றனர்.

இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். இதுபோன்ற அருமையான காட்சி அமைப்பு, நல்ல‍ கருத்துக்களை எடுத்துக்கூறும் வசனங்கள் என்று இப்படியே செல்ல வேண்டும். அடுத்த காட்சிக்கு என்ன செய்வது என்ற பதைப்பில் தேவையற்றதை புகுத்தி கதையின் சாராம்சத்தை கெடுத்து விடக் கூடாது என்பதே பாண்டியன் ஸ்டோர்ஸின் ரசிகர்கள் கோரிக்கை.

= விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

#விஜய்_தொலைக்காட்சி, #விஜய்_டிவி, #பாண்டியன்_ஸ்டோர்,
#சத்தியமூர்த்தி, #சுஜிதா, #விஜே #சித்ரா, #ஹேமா, #ஸ்டாலின், #Vijay_Television, #Vijay_TV, #Panidan_Stores, #Sujitha, #VJ_Chitra, #Hema, #Stalin, #Sathyamoorthy #vidhai2virutcham #vidhaitovirutcham

Leave a Reply