Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?

பத்திரங்களை, சான்றிதழ்களை, R.C. புத்தகத்தை லேமினேஷன் செய்யக்கூடாது ஏன் தெரியுமா?

சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா? பிற்காலத்தில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரை வைக்கவோ அல்ல‍து பதிவு எண் குறிப்பிடவோ தேவை ஏற்படும், லேமினேஷன் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களில், கல்விச் சான்றிதழ்களில், வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் முடியாத இக்கட்டான நிலை ஏற்படும். உங்களிடம் சொத்துப் பத்திரம், கல்விச் சான்றிதழ், வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் போன்றவை அந்த நேரத்தில் உங்களுக்கு பயனற்றுப் போய்விடும். அந்த‌ லேமினேஷனை அவ்வளவு எளிதில் பிரிக்கவும் முடியாது. ஒருவேளை பிரிக்க முயன்றாலும், 50 சதவிதம் வீணாகிப் போய்விடும். ஆகவே தான் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை லேமினேஷன் செய்யக்கூடாது.

எனவே மேற்கூறிய‌ ஆவணங்களை தனித்தனியே பிரித்து வைத்து ரப்பர்பேண்ட்டையோ அல்லது கிளிப்புகள் சொருகி வைக்காமல், ஊசி நூல் கொண்டு தைத்து வைத்தல் நல்லது.

மேற்கூறிய ஆவணங்களை சாதாரண ஃபைல்களில் வைத்து பத்திரப்படுத்துவதே நல்லது. முடிந்தால் அனைத்து ஆவணங்களையும் தேதிப்படி வரிசைப்படுத்தி, பென்சிலால் பக்க எண்கள் கொடுத்து வைக்கலாம்.

அவ்வப்போது மேற்கூறிய ஆவணங்களை ஒரேய‌டியாக அப்படியே வைத்து விடாமல், அடிக்கடி எடுத்து சூரிய ஒளியில் படும்படி சில நிமிடங்கள் எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#விதை2விருட்சம்_சத்தியமூர்த்தி, 98841 93081, #லேமினேஷன், #நெகிழி, #உறை, #சொத்து, #பத்திரம், #கல்வி, #சான்றிதழ், #வாகனம், #ஆர்.சி_புத்தகம், #விதை2விருட்சம், #vidhai2virutcham_Sathyamoorthy, #Lamination, #Plastic, #Property, #Education, #Certificate, #Two_Wheeler, #Four_Wheeler, #car, #Lorry, #Van, #Bus, #RC_Book

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: