Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

S.J. சூர்யா பேரைக் கேட்ட‍தும் பயந்துபோன நடிகை ப்ரியா பவானி சங்கர்

S.J. சூர்யா பேரைக்கேட்ட‍தும் பயந்துபோன நடிகை ப்ரியா பவானி சங்கர்

S.J. சூர்யா நாயகனாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்
இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், முக்கிய காமெடி பாத்திரத்தில் கருணாகரனும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர இசையமைத்துள்ளார். வரும் 17ஆம் தேதி வெளியாக வுள்ள இப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட னர். ’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை பிரியா பவானி சங்கர், ”இத்திரைப்படத்தில் நெல்சன் சார் என்னிடம் எஸ்.ஜே.சூர்யா சாருக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்த போது உண்மையிலேயே பயந்து விட்டேன். காரணம் அவர் பயங்கர கோபக்காரர் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

படப்பிடிப்பின்போதுதான் அவரது குழந்தைத் தன்மை தெரிந்தது. படப்பிடிப்பு முடியும் ஒவ்வொரு நாளும் அவ்வளவு பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அவர் பக்கத்தில் இருக்கும்போது ரேடியோ எஃப்.எம்.களோ தொலைக்காட்சியோ தேவையில்லை. அவ்வளவு கண்டெண்ட்டுகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். அவர் பேசுவதைக் கேட்டால் சிரித்துக்கொண்டே இருப்பேன். இப்படத்தில் 25 நாட்கள் நடித்தேன். அத்தனை நாட்களும் அவ்வளவு ஜாலியாகப் போனது’ என்கிறார் பிரியா பவானி சங்கர் . (#Priya_Bhavani_Shankar #Monster #ப்ரியா_பவானி_சங்கர் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: