Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால்,

நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டக்கூடிய ஒரு கூடுதல் ஆவணமே இந்த சொத்து வரி விதிப்பு ரசீது ஆகும். இன்னும் புரியும் படி சொல்ல வேண்டு மென்றால், சொத்து வரி ரசீதுகள்தான் உங்கள் சொத்து உங்கள் அனுபவத்திலும் பாத்தியத்திலும் இருந்து வருவதற்கான முக்கிய ஆதாரம் ஆவணம் ஆகும். எனவேதான் சொத்து வாங்கி அதனை கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால், பிற்காலத்தில் வீண் பிரச்சினைகளுக்கு வித்திடும்.

=>விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – Cell: 98841 93081


விதை2விருட்சம் சத்தியமூர்த்தி , சொத்து, கிரையம், வாங்குதல், விற்பது, பதிவு, பதிவாளர், பட்டா, சொத்து வரி, வரி, ரசீது, ஆவணம், வில்லங்கமில்லா சான்று, வீடு, நிலம், மனை, அடுக்கக‍ம் கட்டிடம், விதை2விருட்சம், vidhai2virutcham_Sathyamurthy, 9884193081, Property, Grade, Buying, Selling, Registration, Registrar, Patta, Property Tax, Tax, Receipt, Crash Document, Non-Encumbrance Certificate, House, Land, Building, vidhai2virutcham, vidhaitovirutcham

Leave a Reply

%d bloggers like this: