Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்…

இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா?

பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது.

ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியும் வண்டி வண்டியாக கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்படுவதைப் பார்த்தால் ஜனநாயகம் பண நாயகமக மாறி விட்டதாகவேத் தெரிகிறது. எவ்வ‍ளவுதான் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்தாலும், தேசத்தின் வாக்குப்பதிவு 65 சதவிதம்தான் இந்த 65 சதவிதத்தில் 30 சதவீதம் பெற்ற‍வர்கள் ஆட்சியில் அமர்வது எப்படி ஜனநாயக முறையாகும்.?

சுவரொட்டியில்லை விடி விடிய பிரச்சாரமில்லை, மூலைக்கு மூலை காதை கிழிக்கும் ஒலிபெருக்கியில்லை. சுவர்களில் கரிக்கோலமில்லை. தேர்தலில் நிற்பவர்களின் சொத்தும் கணக்குத் தரப்படுகிறது. பணம் விளையாடிய இடங்களில் தேர்தல் ரத்து செய்ய‍ப்படுகிறது. இவை மட்டும் போதாது இன்னும் மாற்றம் வேண்டும்.

தேசத்தின் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என 4 பகுதிகளில் 4 கட்டங்களாக அடுத்தடுத்த‍ வாரங்களில் தேர்தல் நடத்தலாம்.
வேட்பாளர்கள் யார் எவர் என்ன சாதித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில் வேட்பாளர் கையேட்டை அந்தத் தொகுதியிலுள்ள அனைவரது வீட்டிலும் வழங்கும் பொறுப்பை தேர்தல் ஆணையமே ஏற்கலாம். இந்த செலவை ஈடுகட்ட டெபாசிட் தொகையை அதிகரிக்கலாம். தேர்தலின் போது கணக்கில் காட்டப்படாத பிடிபடும் வேட்பாளர் தேர்தலில் நிற்பதற்குத் தடைவிதிக்கலாம். கருத்துக் கணிப்புக்களை முழுமையாக தடைசெய்யலாம். இணையதளத்தின் மூலம் வாக்களிக்கும் முறையைப் பற்றியும் சிந்திக்கலாம்.

வாக்களிப்பதில் உண்மையும்… வாக்குப் பெறுவதில் நேர்மையும் இருந்தால் தேறும் தேர்தல் தேறுமானால் தேசம் தெளிவுடன் முன்னேறும்.

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

நம் உரத்த‍ சிந்தனை ( Nam Uratha Sindhanai ) மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்

ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

#தேர்தல், #நாடாளுமன்றம், #மக்களைவை, #மாநிலங்களை, #எலக்ஷன், #பாராளுமன்றம், #உறுப்பினர், #அமைச்சர், #பிரதமர், #ஆணையர், #தேர்தல்_ஆணையாளர், #ஆணையாளர், #லோக் சபா, #இராஜ்ய சபா, #விதை2விருட்சம், #உரத்த_சிந்தனை, #நம்_உரத்த_சிந்தனை, #Elections, #Parliament, #People, #States, #Parliament, #Member, #Minister, #Prime_Minister, #Commissioner, #Election #Commissioner, #Commissioner, #Lok_Sabha, #Rajya_Sabha, #Uratha Sindhanai, #Nam_Uratha_Sindhanai

Leave a Reply