பெண்களின் கண்களும் – ஐ லைனரும்

பெண்களை அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டுவது அவர்களது கண்கள் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்களின் அமைப்பு, அளவு, நிறம் போன்றவை மாறுபடும். ஆக எந்த வகையான கண்களுக்கு எந்த வகையான ஐ லைனரை பயன்படுத்த வேண்டும் என்பதை நன்குணர்ந்து, கண்களை பராமரித்து வந்தால், அவர்களின் கண்களின் கவர்ச்சியை அடித்துக் கொள்ள வேறு ஆளே கிடையாது.
கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.
பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாக ஐலைனர் போடவேண்டும்.
சிறு கண் உடையவர்கள் அழுத்தமாக ஐலைனர் போடவேண்டும்.
விழி துருத்திக் கொண்டு வெளியே இருப்பது போல் தோற்றம் உள்ள பெண்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும்.
கருமையான விழி உடைய பெண்கள், கண் இமைக்கும் புருவத்துக்கும், நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்த வேண்டும்.
#விழி, #கண், #கண்கள், #விழிகள், #இமை, #புருவம், #ஐ_லைனர், #ஐ_ஷேடோ, #ஐ, #விதை2விருட்சம், #Eye, #eyes, #eyebrow, #eyebrow, #eyeliner, #eye_shadow, #vidhai2virutcham, #vidhaitovirutcham