Tuesday, July 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

அண்மைக்காலமாக திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தடைகோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதும் அவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அந்த திரைப்படம் வெளியிடுவதற்கு நிரந்தர தடையோ அல்ல‍து தற்காலிக தடை விதிக்கும். இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல‍, தனிப்பட்ட விஷயங்களுக்கும், அரசியல் தொடர்பாக விஷயங்களுக்கும், அரசு தொடர்பான விஷயங்களுக்கும் பொருந்தும்

Injunction Order என்பதை உறுத்து ஆணை என்று அழைக்கிறோம். உறுத்து ஆணை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.

உறுத்து ஆணையின் வகைகள்

1) இடைக்கால (தற்காலிக) உறுத்து ஆணை (Interim Injunction or Temporary Injunction)

2) செயலுறுத்து ஆணை (Mandatory Injunction)

3) நிலைக்கால உறுத்து ஆணை (Perpetual Injunction)

4) தடை உறுத்து ஆணை (Prohibitory Injunction)

என்று நான்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளைக்கு இடைக்கால உறுத்து ஆணை என்று பெயர்.

ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் இடும் கட்டளைக்கு செயலுறுத்து ஆணை என்று பெயர்.

ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் இடும் கட்டளைக்கு தடையுறுத்து ஆணை என்று பெயர்.

யாரெல்லாம் உறுத்து ஆணை பெற முடியும்?

உறுத்து ஆணையினை ஒருவர் நீதிமன்றத்தில் பெறுவதற்கு அவர் தொடுத்த அல்லது அவர்மீது வேறு எவராவது தொடுத்த வழக்கு ஒன்று நிலுவையில் இருக்க வேண்டும்.

எந்த சூ்ழ்நிலையில் உறுத்து ஆணை பெறமுடியாது?

வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ, அல்லது அந்த வழக்கு முடிவடைந்து விட்டாலோ உறுத்துக் கட்டளை பெற முடியாது.

உறுத்து ஆணையினை வழங்குவதற்கு நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் இல்லாத போது அந்த வழக்கில் உறுத்து ஆணை வழங்கக்கூடாது.

பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்கில் உறுத்து ஆணை பெற முடியாது.

ஒரு நிர்வாகமானது தன்னுடைய வேலையாளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைக்கு எதிராக உறுத்து ஆணை பெறமுடியாது.

வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்யாமல் இருக்கும்போது உறுத்து ஆணை பெறமுடியாது.

எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதோ அப்போது முதலே உறுத்து ஆணை நடைமுறைக்கு வரும்.

ஒரு வழக்கில் உறுத்துக்கட்டளை வழங்கப்பட்டு இருந்தால் அந்த வழக்கு முடிந்தவுடன் உறுத்து ஆணையும் முடிவுக்கு வந்துவிடும்.

வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த வழக்கில் உறுத்து ஆணை பெற்றவர் முன்னிலை ஆக தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகியிருந்தால், பெறப்பட்டிருந்த உறுத்து ஆணையும் தள்ளுபடி ஆகிவிடும். அந்த வழக்கு மீண்டும் கோப்பில் எடுக்கப்பட்டால் உறுத்து ஆணையையும் தானாக கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

உறுத்து ஆணையை மீறுவது தண்டணைக்குரிய குற்றமாகும்.

எதிர்தரப்பினர் உறுத்துக்கட்டளையை மீறுவதை உறுத்து ஆணையை பெற்றவர்தான் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.

=? எழுதியது யாரென்று தெரியவில்லை. எனது மின்னஞ்சலுக்கு வந்த பதிவு இது.


#தடை_ஆணை, #கட்டளை, #தடை, #உறுத்து, #ஆணை, #இடைக்கால_ உறுத்து_ஆணை, #தற்காலிக_உறுத்து_ஆணை, #Interim_Injunction_or_Temporary_Injunction, #செயலுறுத்து_ஆணை, #Mandatory_Injunction, #நிலைக்கால_உறுத்து_ஆணை, #Perpetual_Injunction, #தடை_உறுத்து_ஆணை, #Prohibitory_Injunction #விதை2விருட்சம், #Injunction, #Interim, #Mandatory, #Prohibitory, #vidhai2virutcham, #vidhaitovirutcham #Order

Leave a Reply

%d bloggers like this: