ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதெல்லாம் எதைப் பேசினாலும், பாடினாலும், எழுதினாலும் அதில் உள்ள ஒரு வார்த்தையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு சிலர் அரசியல் செய்வது விரும்பத்தகாதது, வெறுக்கத்தக்கது. இந்த பதிவை ஒரு நடுநிலையானனாக இருந்து நான் எழுதுகிறேன்.
ஜனநாயக நாட்டில் ஒரு நடிகர், பாடல் ஒன்றை பாடினால், அந்த பாடலில் வரும் ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.
ஒரு நடிகை, கேள்விக்கு அளித்த பதிலில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.
ஒரு பாடலாசிரியர் ஆன்மீகம் குறித்து பேசும்போது 100 வார்த்தைகள் பெருமையாக பேசிவிட்டு, ஒரு வார்த்தை, எதிர்மறையாக இருப்பதாக வேறு ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியதில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அண்மையில் மறைந்த ஒரு மூத்த அரசியல் பிரமுகர் தெரிவித்த கருத்தில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்
ஒரு வார இதழ் ஒன்றில் மாநில முதல்வர் குறித்த கட்டுரையின் தலைப்பில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சில அரசியல் செய்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓராண்டு முன்பு கபட்சி தொடங்கிய ஒரு கட்சியின் தலைவர், தெரிவித்த கருத்தில் உள்ள ஒரு வார்த்தை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்
இவர்கள் என்னவென்று அரசியல் செய்கிறார்கள், மேற்சொன்னவர்கள் யாவரும் எதிர்மறையாக பேசிவிட்டார்கள் என்று அந்த எதிர்மறையாக பேசியவர்களுக்கு எதிராக கொடிபிடித்து எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.
ஒருவர் எதிர்மறையாக பேசினால், அவர்கள் பேசிய அந்த அரங்கில் உள்ள சில நூறு பேர், அல்லது அவரது உரையை தொலைக்காட்சியல் பார்த்த சில ஆயிரம் பேர் இவர்களுடன் அது அடங்கிப்போயிருக்கும். அந்த எதிர்மறைய வார்த்தையும் முடங்கிப்போயிருக்கும்.
ஆனால் இவர்களோ, அவர் இப்படி எதிர்மறையாக பேசிவிட்டார் என்று சொல்லியே சில ஆயிரம் பேர் மட்டும் கேட்ட எதிர்மறை கருத்தை, எதிர்ப்புக்குரல் என்ற பெயரில் மேடைதோறும் பேசுவதும், தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பதும், பத்திரிகைகளில் கண்டனக் கட்டுரைகள் எழுதுவதுமாக இருந்து கோடிக்கணக் கானோரின் செவிகள் கேட்டு மனத்தில் அப்படி பதியச் செய்து விடுகின்றனர்.
எனக்கென்னவோ, எதிர்மறையை கருத்தைச் சொல்பவரை விட அந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களே இவர்களால்தான் எதிர்மறை வார்த்தை ஊடக வெளிச்சத்துடன் உலகம் முழுக்க பரப்பிக் கொண்டு, அந்த எதிர்மறைக் கருத்து தெரிவித்தவர்களுக்கும் இலவசமாக விளம்பரமும் செய்து கொடுத்து, அவர்களை மிகவும் உயர்த்து விடுகிறார்களோ என்ற ஐயப்பாடு எனக்குள் எழுகிறது.
எதிர்மறைக் கருத்துக்களை தெரிவித்தவர்களை கண்டிப்பதை விட, அந்த எதிர்மறை கருத்துக்களை வைத்து அரசியல் செய்கிறார்களே இவர்களைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அப்போது தான் மக்களிடம் தேவையற்ற பீதி பரவுவதை தடுக்க முடியும். ஆகவே ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது.
இதோ பாருங்கள், நான் எழுதிய இந்த பதிவில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து, சிலர் அரசியல் செய்ய முற்படுவார்கள். ஆனால் நான் அதைப்பற்றி துளியும் கவலைப்படமாட்டேன்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081
#நடிகர், #நடிகை, #பாடலாசிரியர், #அரசியல்வாதி, #தலைவர், #வார_இதழ், #எதிர்மறை, #நேற்மறை, #ஆசிரியர், #விதை2விருட்சம், #Actor, #Actress, #Lyrics_Writer, #Political_Leader, #Politician, #Weekly #Magazine, #negative, #positive, #editor, #vidhai2virutcham, #vidhaitovirutcham