மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா – சிவா கூட்டணி முதல் முறையாக இணைகிறது. மேலும் டி.இமான் இந்த படத்திற்கு இசையைமக்க இருப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை இந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
#ஸ்டூடியோ_கிரீன், #நயன்தாரா, #சூரியா, #விஜய், #சிவா, #விஸ்வாசம், #டி_இமான், #தளபதி_63, #தர்பார், #ரஜினி, #விதை2விருட்சம், #Studio_Green, #Nayanthara, #Surya, #Soorya, #Vijay, #Siva, #Shiva, #Viswasam, #D_Iman, #Thalapathi_63, #Darbar, #Rajini, #Rajni, #vidhai2virutcham, #vidhaitovirutcham