Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

தில்லுமுல்லு புகழ் நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

K.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு அங்கும் ஓடி வருவாரே அவர்தான் விஜி. அன்று தொடங்கிய இவரது திரைப்யணம் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய‌ ஆரோஹணம் திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருப்பார். அந்தபடம் விருது பெற்றது. தற்போது இவரது மகள், லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தற்போது நடிப்பு, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பு, திரைப்படம் இயக்கம் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்’. பசங்க கிஷோர் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

க‌டந்த 2015 ஆம் ஆண்டு, சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக வைத்து தீவிரமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#ஹவுஸ்_ஓனர், #காதல், #கதை, #விஜி, #விஜி #சந்திரசேகர், #லஷ்மி_ராமகிருஷ்ணா, #லவ்லின், #கிஷோர்,
#தில்லுமுல்லு , #ஆரோஹணம், #விதை2விருட்சம், #House_Owner, #Love, #Story, #Viji, #Viji_Chandrasekhar, #Lakmi_Ramakrishna, #Lovely, #Kishore, #Aarohan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Lovelyn, #Lovelin, #Thillumullu,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: