Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் காணப்படுகின்றன‌. மேலும் இதில் உணவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சில இரசாயனங்களையும் சில நிறமிகளையும் சேர்க்கின்றன•

இவற்றில் எதிலும் நமது உடலுக்கு முக்கியத் தேவையான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து உட்பட பலது இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை உடனடியாக‌ நிறுத்துவது அவ்வ‍ளவு எளிதான காரியமல்ல‍.

ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப் பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் உடல் எடை மிக வேகமாக‌ அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக அவர்களின் உடலில் ஆரோக்கியக் கோளாறுகள் பல ஏற்பட்டு, மரணம் வரை கொண்டு செல்லும் என்றும் மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ள‍து.

ஆகவே உடலுக்கும் உள்ள‍த்துக்கும் ஆரோக்கியமான உணவுகள் எவை எவையென்று விழிப்புடன் இருந்து உட்கொண்டு வந்தால் அதீத எடை கூடாமல், அன்ன‍ நடை, சின்ன‍ இடையுடன் அழகு தேவதையாக‌ வாழலாம் என்றென்றும் ஆனந்தமாய்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 9884193081

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி, கைபேசி, 9884193081, விதை2விருட்சம், சத்தியமூர்த்தி, ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்கு, சிப்ஸ், டின் உணவு, தயிர், கூல்ரிங்க்ஸ், விதை2விருட்சம், Pickles, Chips, Potato, Tin Food, Processed Food, Cup Curd, Cool Drinks, vidhai2virutcham, vidhaitovirutcham, seed to tree, seed to tree,

Leave a Reply