நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா நட்பு – சதி செய்யும் அந்த நடிகர்
பொதுவாக இரு நடிகைகள் ஒரே திரைப்படத்தில் நடிக்கும் போது, தேவையில்லாத விஷயங்களில் கூட ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கும். இதனால் படப்பிடிப்புகள் பாதியிலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சூழ்லகளும் உண்டு. ஆனால் சமீப காலமாக, ஒரே படத்தில் இரு நடிகைகள் நடித்தாலும் அவர்களுக்குள் ஈகோ தலைதூக்குவதில்லை. அதற்கு பதிலாக நட்பு மேலோங்கி வருவது பாராட்டத்தக்கது. உதாரணமாக கலகலப்பு திரைப்படத்தில் நடிகைகள் ஓவியாவும் அஞ்சலியும், கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் நடிகைகள் நிக்கி கல்ராணியும், கயல் ஆனந்தியும், பலூன் திரைப்படத்தில் நடிகைகள் அஞ்சலியும், ஜனனி அய்யரும், இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கனா திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷும், நடிகை நந்திதா சுவேதாவும் இப்போது ஈருடல் ஓருயிராக இருக்கின்றனர். எப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவர் மற்றொருவருக்கு கைபேசி மூலமாக அழைப்பு விடுத்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கிறார்களாம்.
இதுகுறித்து நந்திதாவிடம் கேட்டதற்கு, கனா திரைப்படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு அறிமுகம் ஆனார். அது முதல் என்னுடைய உடன்பிறவா சகோதரியாக மாறிவிட்டார். பற்பல விஷயங்களில் அந்த படப்பிடிப்பு தளத்திலேயே என்னோடு மனம் விட்டு பகிர்ந்து கொள்வார். நானும் அவரைப்போலவே பல விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறார். எங்கள் நட்பை பார்த்து ஒரு நடிகர், பெயர் சொல்ல விரும்பவில்லை பொறாமை கொண்டிருப்பதாக எனக்கு நெருக்கமானவர் என்னிடம் சொன்னார். நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை எங்கள் இருவரின் நட்பு என்றும் தொடரும் என்றார் அழுத்தமாக
நடிகை, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா, ந்ந்திதா, ஐஸ்வர்யா, கனா, அஞ்சலி, ஓவியா, விதை2விருட்சம், Actress, Aiswarya Rajesh, Nandita Swetha, Aiswarya, Nandita, Anjali, Oviya, vidhai2virutcham, vidhaitovirutcham, seed to tree, seed 2 tree,