Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி

இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி

கடந்த 28ம் தேதி வெளியிட்ட தமிழக அரசின் அரசாணையில் தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளை 24 மணி நேரம் திறந்து கொள்ளவும் அந்த உத்தரவில் அம்சம் இடம் பெற்றுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மல்டிபிளக்ஸ், மால் அல்லது சிறு திரையரங்குகள் என தனித்தனி பாகுபாடுகள் இதில், கிடையாது..

மேலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்கு களுக்கும் ஒரே சீராக இந்த உத்தரவு பொருந்தும். சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் பகுதிகளில் திறந்து கடைகளை மூடுவதற்கான உத்தரவை காவல்துறை பிறப்பிக்க முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திரையரங்கு, தியேட்டர், கொட்டாய், டாக்கீஸ், 24 மணிநேரமும், விதை2விருட்சம், சினிமா, Theater, Takikes, 24 Hours, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply

%d bloggers like this: