Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம்.

நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், ‘பிரன்டனல்’ என்ற அறைகளும், சற்று கீழே, ‘எத்மாய்டு’ அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், ‘மேக்சிலரி’ என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம்.

வீடுகளை, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மின் விசிறிகளில் துாசி படிவது; நாய், பூனை உள்ளிட்ட வீட்டு செல்லப் பிராணிகள் எச்சம் மற்றும் முடி இரைந்து கிடப்பது, குளிர்சாதன இயந்திர, ‘பில்டரில்’ துாசி படிதல் ஆகியவற்றால், பிரச்னை ஏற்படும். குளிர் சாதன இயந்திரத்தை, வாரத்திற்கு ஒருமுறை, சுத்தம் செய்ய வேண்டும்.

பெரிய அலுவலகங்களில், ‘சென்ட்ரலைஸ்டு ஏசி’ (Centralized AC) உள்ளது. இவற்றில், நிறைய துாசி படியும். இதை ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யாமல் விட்டு விடுவதால், சைனஸ் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

மேலும், அலுவலகத்தில் உள்ள ஒருவர், அலர்ஜியால் பாதிக்கப்பட்டு தும்மினாலும், அதன் பாதிப்பு, அலுவலகத்தில் உள்ள எல்லாரையும் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. இது, நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

சைனஸ், பிரச்சினை,. முன்னெச்சரிக்கை, நடவடிக்கைகள், மூக்கு, எலும்பு, சைனஸ் அறைகள், புருவம், நெற்றி,, பிரன்டனல், எத்மாய்டு, மேக்சிலரி, சிற்றறைகள், மின் விசிறி, துாசி படிவது; நாய், பூனை, செல்லப் பிராணிகள், எச்சம்,மற்றும் முடி இரைந்து கிடப்பது, குளிர்சாதன இயந்திர, ‘பில்டரில்’ துாசி படிதல் ஆகியவற்றால், பிரச்னை ஏற்படும். குளிர்சாதன இயந்திரம், வாரத்திற்கு ஒரு முறை, சுத்தம், சென்ட்ரலைஸ்டு ஏசி, துாசி, விதை2விருட்சம், Sinus, problem. Precautions, activities, nose, bone, sinus rooms, eyebrow, forehead, prunetal, ethmidi, maculari, cellars, electric fan, squeeze; The problem with the dog, cat, pets, residue, and drying of the hair, the refrigerator, and the filtering of the filter. Refrigerator, once a week, cleaning, centered AC, tassi, seed 2 tree

Leave a Reply

%d bloggers like this: