Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

முத்திரைத்தாள் (Stamp Paper) வீணாகிவிட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

பல்வேறு சொத்து பரிவர்த்த‍னை, தொழில் மற்றும் நம்பிக்கை சார்ந்த‌ ஒப்ப‍ந்தங்கள், முத்திரைத்தாளில் (ஸ்டேம்ப் பேப்பர் – Stamp Paper-ல்) டைப் அடித்து பதிவேற்றம் செய்து அதில் கையொப்பம் இட்டு, அதனை அப்ப‍டியே கொண்டுபோய் பதிவாளர் அலுவலகளத்தில் பதிவுசெய்து உரிய ஆவண எண்ணையும் அந்த அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொள்கிறோம்.

ஒருவேளை, பெருந்தொகை முத்திரைத்தாள் (ஸ்டேம்ப் பேப்பர் – Stamp Paper)-ல் பதிவேற்றும் செய்யும் போது, பிரிண்டரில் சிக்கிக் கொண்டு கிழிந்து விட்டாலோ, அல்ல‍து கசங்கி விட்டாலோ அல்ல‍து தவறாக பதிவேற்ற‍ம் செய்ய‍ப்ட்டு விட்டாலோ அல்ல‍து அந்த முத்திரைத்தாள் ஏதேனும் சேதாரம் ஆனாலோ அந்த முத்திரைத் தாளுக்கு செலவழித்த‍ பெருந்தொகை வீணாக போய்விடும் அது முத்திரைத்தாள் வாங்கியவருக்கு நட்ட‍ம் ஏற்படும். ஆக இந்த இது போன்று மேற்சொன்ன‍ காரணங்களால் வாங்கிய முத்திரைத் தாள்கள் சேதாரம் அடைந்துவிட்டால் அதனை அப்ப‍டியே கருவூலத்தில் ஒப்படைத்தால், ஒரு குறிப்பிட்ட‍ சதவிதம் பிடித்த‍ம் செய்து கொண்டு, மீதித்தொகையை திருப்பித் தந்து விடுவார்கள். இது பெருமதிப்புடைய முத்திரைத்தாள்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

Adoption DeedBusiness ContractConstruction AgreementContract AgreementdocumentsDonationlease agreementLoan AgreementParticipatory DeedPartition DeedPledge DeedPower of Attorneyrental agreementSale AgreementSale DeedSettlementStamp PaperTenancy Agreementvidhai2virutchamvidhaitovirutchamஆவணங்கள்உறுதிமொழி பத்திரம்கடன் பத்திரம்கட்டுமான ஒப்பந்தம்கிரைய ஒப்பந்தம்கிரையப் பத்திரம்குத்தகை ஒப்பந்தம்செட்டில்மெண்ட்தத்தெடுப்பு பத்திரம்தானம்பாகப்பிரிவினை பத்திரம்பொது அதிகார பத்திரம்முத்திரைத் தாள்வாடகை ஒப்பந்தம்விதை2விருட்சம்வியாபார ஒப்பந்தப் பத்திரம்ஸ்டேம்பு பேப்பர்

Leave a Reply

%d bloggers like this: