Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால் பெருவிரல் வீக்கமும் – ஆபத்தான‌ 8 அறிகுறிகளும்

கால் பெருவிரல் வீக்கமும் – ஆபத்தான‌ எட்டு அறிகுறிகளும்

கால் பெருவிரல் வீக்கம் வளர்ந்து பெரிதாகும் போது, உங்களுக்கு இங்கு குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தோன்றலாம்.

1. கால் பெருவிரல் காலணியுடன் உராயும்போது, மேல்தோலில் வலி அதிகரிக்கும். 2. கால் பெருவிரல் வீக்கத்தை சுற்றி மரத்துப் போன நிலை உருவாகும். 3. எரிச்சல் உணர்வு மேலோங்கும். 4. பாதத்தில் வீக்கம் ஏற்படலாம் 5. பாதிக்கப்பட்ட விரலின் அடிப்பகுதி தோல் அடர்த்தியாக மாறலாம். 6. தோலில் உராய்வு ஏற்படுவதால் தோல் சிவத்து போவது அல்லது ஆழ்ந்த அழற்சி காரணமாக சிவத்து போவது 7. உங்கள் ஒட்டுமொத்த உடலின் எடை சீரின்றி பரவுவதால் தோல் தடிப்பு ஏற்படலாம். 8. பாதிக்கப்பட்ட மூட்டுகளில் செயல்பாடு குறையலாம்

இந்த அறிகுறிகள் விரக்தியும் வேதனையும் அளித்து, உங்களுக்கு சௌகரியமான காலணிகளை அணிய விடாமல் செய்கிறது. இந்த வகை வீக்கத்திற்கு சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பு இல்லா விட்டால், அவை வளர்ந்து பெரிதாகி, வைடு-டோ (wide-toe) காலணிகள் கூட அணியமுடியாத நிலை உண்டாகலாம்.

=> அம்பிகா சரவணன்

கால், பெருவிரல், கால்பெருவிரல், மூட்டு, பாதம், விரல், வலி, வீக்கம், தோல், அறிகுறி, விதை2விருட்சம், Foot, thumb, thumb, joint, foot, finger, pain, swelling, skin, symptom, seed2tree, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree

Leave a Reply