Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த‍ அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ள‍து. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது

பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த புதிய அறிவிப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் 50,000 ரூபாய் வரையில் இலவசமாக பணமாக டெபாசிட் செய்ய முடியும். அதன் பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் இந்த சேவை கட்டணமானது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இருக்கும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நேரடி பணப்பரிவர்த்தனையை குறைக்கவும் இந்த நடவடிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், இத்தகைய கட்டண அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#க‌னரா_வங்கி, #டெபாசிட், #கட்ட‍ணம், #வங்கி, #பணம், #தொகை, 2000, 500, 100, 50, ஏடிஎம், சேவை, பரிவர்த்த‍னை, வாடிக்கையாளர், எஸ்.பி.ஐ., #ஸ்டேட்_பாங்க்_ஆஃப்_இந்தியா, #மினிமம்_பேலன்ஸ், ஜூலை, #அபராதம், #தண்டம், #ஃபைன், #பெனாலிட்டி, #மாநில_வங்கி, #Canara_Bank, #Deposit, Pay, Fee, Bank, Cash, Currency, ATM, Service, Transaction, Customer, #SBI, State Bank Of India, Minimum Balance, July, Fine, Penalty,

Leave a Reply

%d bloggers like this: