Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் தலைமையிலான‌ அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியபிறகு இந்த இடம் தேறாது என பலரும் கட்சி மாறி வருகின்றனர். தேர்தல் முடிவு வெளியான போதே தங்க• தமிழ்செல்வன், சொந்த சாதிகாரன் கூட அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து.அதிமுகவை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தையும் விமர்சிப்பதை படிபடியாகக் குறைத்துக் கொண்டார். மேலும் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் இனி இங்கே இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் அதிமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்பட்டது.

அங்கே அவருக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் அல்ல‍து தேனி மாவட்ட‍ செயலாளர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்று தருவதாக உறுதி அளித்துள்ள‍னராம். இதனைத் தொடர்ந்தே சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் பாராட்டத் தொடங்கி விட்டார் தங்க தமிழ்செல்வன்.

அதுமட்டுமல்ல‍ இத்தனைநாட்களாக டிடிவி தினகரனை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடிய டிடி வி தினகரனையும் அமமுகவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த‍ பேட்டி ஒன்றில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை. தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை சரியாகத் தான் இருந்தது. அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது ரொம்ப பிடிக்கும்’’ என எடப்பாடியின் திட்டங்களை பாராட்டி பூக்களால் அர்ச்சித்து வருகிறார்.

இந்நிலையில் விரைவில் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கேள்வியுற்ற‍ டி.டி.வி.தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வரிசையாக பிரமுகர்கள் அமமுக வில் இருந்து வெளியேறிவருவதால் அமமுக கூடாரம் காலியாகும் என்றே சொல்லப்படுகிறது.

அம்மா மக்க‍ள் முன்னேற்ற‍க் கழகம், அமமுக, அண்ணா திராவிட முன்னேற்ற‍க் கழகம், அதிமுக, தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரன், அரசியல், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், விதை2விருட்சம், Amma Makkal Munnetra Kazhagam, AMMK, Anna Dravida Munetra Kazhagam, ADMK, TTV Dinakaran, Politics, Edapadi Palanisamy, O Panneerselvam, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply

%d bloggers like this: