Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

எந்தவித வெளியுக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றி கரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

நேற்று 15 போட்டியாளர்களை மக்களிடம் அறிமுகம் செய்துவைத்த கமல்ஹாசன், அவர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி யுள்ளது. அதில், தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக பிக்பாஸ் தெரிவிக்க அனைவரும் கைதட்டி வரவேற்கின்றனர். அப்போது பேசிய பாத்திமா பாபு, பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்திருப்பது ஒரு அவலம் அதை கைதட்டி வரவேற்க வேண்டியதில்லை என்கிறார்.

அதற்கு பதில் கொடுத்த சேரன், தண்ணீர் பயன்படுத்துவதற்காக ஒரு அளவீடு கொடுக்கப்பட்டிருப்பது. தண்ணீரின் சிக்கனத்தை கொண்டு வந்ததற்காகத் தான் கைதட்டி வரவேற்றோம் என்கிறார். இதனால் ஆரம்பித்த முதல்நாளே தண்ணீரால் வீட்டுக்குள் பிரச்னை எழுந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

#பாத்திமா_பாபு, #லாஸ்லியா, #சாக்‌ஷி_அகர்வால், #மதுமிதா, #கவின், #அபிராமி, #சரவணன், #வனிதா_விஜய்குமார், #சேரன், #ஷெரின், #மோகன்_வைத்யா, #தர்ஷன், #சாண்டி, #முகின்_ராவ், #ரேஷ்மா #பிக்பாஸ், #கமல், #கமல்ஹாசன், #விஜய்_தொலைக்காட்சி, #விஜய்டிவி, #விதை2விருட்சம் #Fathima_Babu, #Losliya, #Sakshi_Agarwal, #Madhumidha, #Kavin, #Abirami_Venkatasalam, #Saravanan, #Vanitha_Vijayakumar, #Cheran, #Sherin, #Mohan_vaidya, #Darshan, #Sandy, #MukinRao, #Reshma, #Biggboss, #Kamal, #Kamalhasan, #Vijay_Television, #Vijay_TV, #vidhai2virutcam, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: