Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புஷ்பா புருஷன், புஷ்பாவை கொடுமைப்படுத்திய பயங்கரம் – நடிகை ரேஷ்மா கதறல்

புஷ்பா புருஷன், புஷ்பாவை கொடுமைப்படுத்திய பயங்கரம் – நடிகை ரேஷ்மா கதறல்

புஷ்பா என்ற கதாபாத்திரத்தை ஏற்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆன நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் பற்றி பேசியுள்ளார். இதன் போது நடிகை ரேஷ்மாவின் கதையை கேட்டு மொத்த பிக்பாஸ் குடும்பமே கண்ணீர் சிந்தியுள்ளது.

அவர் பேசும்போது தனது முதல் திருமணம் 18 வயதில் நடந்தது, பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த‍ திருமணம் என்றாலும் . எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆக வில்லை. மேலும் அவர் என்னை படிக்க விட வில்லை, சிறையில் இருப்பது போல இருந்தது. அவருடன் எனக்கு ஒரு பையன் இருக்கிறான். இனிமேல் முடியாது என விவாகரத்து பெற்றுவிட்டேன். கஷ்டப்பட்டு பையனை வளர்த்தேன்.

இரண்டு வருடம் கழித்து அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டேன். அவருடன் நான் 5 மாதம் கர்ப்பமாக இருந்தபோது என் கணவர் என்னை ஏமாற்றுகிறார் என அறிந்தேன். அவர் என்னை தாக்கிவிட்டு வெளியேறி விட்டார். நானே கார் எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்ந்து குழந்தையை பெற்றெடுத்தேன். உதவிக்கு வேறு யாரும் இல்லை. என்னுடைய 8 வயது மகன்தான் இருந்தான். என கணவர் என்னை ரொம்ப அடிச்சாரு.. மூஞ்சை உடைச்சாரு.. மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.. முட்டி உடைந்து விட்டது.

இதுவும் சரியாக அமையவில்லை.. டிவோர்ஸ் செய்துவிட்டேன். அவர் நிழல் கூட என் குழந்தைகள் மீது படக்கூடாது என ஜீவனாம்சம் கூட வேண்டாம் என கூறிவிட்டேன் என ரேஷ்மா கூறினார் என கூறியுள்ளார்.

நடிகை, ரேஷ்மா, புஷ்பா, புஷ்பா புருஷன், விதை2விருட்சம், பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சி, விஜய் டி.வி, Actress, Reshma, Pushpa, Pushpa_Purushan, vidhai2virutcham, vidhaitovirutcham, Biggboss, vijay_TV, Vijay_Television, seedtotree, seed2tree,

Leave a Reply