Sunday, November 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – கைதாவார்களா வனிதாவும் மீராமிதுனும்

ஆள்கடத்தல் வழக்கில் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவைக் கைது செய்ய தெலங்கானா போலீஸ் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மோசடி வழக்கு சம்பந்தமாக மீரா மிதுன் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று வனிதா விஜயக்குமார் கைதாவார் என்று செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனிதாவுக்கு 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாரத்துப் பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அவரின் மகன் தற்போது வனிதாவின் தந்தை விஜயக்குமாருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர். அதன்பின் அவர்களது குழந்தையை ராஜன் ஆனந்திடம் கோர்ட் வளரட்டும் என்று உத்தரவிட்டது. ராஜன் ஆனந்த் தற்போது மகளுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகளை பிப்ரவரி மாதம் பார்க்க வந்தபோது அவருடனே அழைத்துச் சென்றுவிட்டதாகவும் மகளை மீட்டுத் தருமாறும் ராஜன் ஆனந்த் கொடுத்தப் புகாரின் பேரில் தெலங்கானா போலீசார் ஆள்கடத்தல் பிரிவில் வனிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது சென்னை வந்திருக்கும் அவர்கள் பிக்பாஸ் வீடு இருக்கும் ஃபிலிம் சிட்டிக்கு சென்று அங்கு சம்பந்தப்பட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் களிடம் வனிதாவை ஒப்படைக்கும்படி கேட்டதாகவும் அவர்கள் மறுத்தால் வீட்டுக்குள் சென்று கைது செய்யவும் திட்டமிட்டமிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதேபோலவே மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன், தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார் ஒரு பெண். அந்த வழக்கு சம்பந்தமாக ஆஜாராகும் படி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜாராகாத மீரா மிதுன் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டார். இந்த வழக்கோடு ஈவண்ட் மேனேஜர் ஒருவர் தொடர்ந்த வழக்கும் உள்ளதால், இவர் தப்பிப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இவரைக் கைது செய்யவும் போலீசார் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் எல்லாம் தெரிந்தும் டி.ஆர்.பிக்காக தொலைக் காட்சி நிறுவனமே தெரிந்துதான் இவர்களை போட்டி யாளர்களாக தேர்ந் தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல மராத்தி பிக்பாஸில் பாடகர் அபிஜித் கைது செய்யப்பட்டார். இதற்கு முன் 2013-ஆம் ஆண்டு பிக்பாஸ் வீட்டில் தவறாக நடந்து கொண்ட தற்காக அர்மான் கோலி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#பிக்பாஸ், தமிழ், பிக்பாஸ்தமிழ், #வனிதா, #வனிதா_விஜயகுமார், ஆகாஷ், #மீரா_மிதுன், மீரா, விதை2விருட்சம், விஜய் தொலைக்காட்சி, விஜய் டிவி., Biggboss, Tamil, #Biggboss Tamil, vanitha, Vanitha Vijayakumar, Akash, Meera Mithun, Meera, #vidhai2virutcham, #vidhaitovirutcham, vijay tv, vijay television, seedtotree, seed2tree

Leave a Reply