Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிட்ட‍வரை உள்ள‍ளவும் நினை போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டினாலும், இந்த உப்பு அதிகமானால் நமது உடலில் என்னென்ன‍ விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இங்கே காணலாம்.

ஒரு மனிதன், நல்ல‍ உடல்நிலையோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நாளொன்றுக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவைப்படாது. இந்த உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை நீங்களே உணரலாம்.

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாக்கி அதன்மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்

உயர் ரத்த அழுத்தத்துக்கு முழு முதல் காரணமாக விளங்குவது இந்த உப்புதான். ஆகவே உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சப்பிடுவோரு க்கு கண்டிப்பாக உயர் ரத்த‍ அழுத்த‍ பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.

நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் ஏற்பட அதிக உப்பே பிரதான காரணமாக சொல்ல‍ப்படுகிறது. ஆகவே இந்த உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள‍க் கூடாது.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

நீரிழிவு நோய், சர்க்க‍ரை நோய், உப்பு, சோடியம் சல்பேட், ரத்த‍ அழுத்த‍ம், உயர் ரத்த‍ அழுத்த‍ம், சால்ட், சிறுநீரகம், சிறுநீரக கற்கள், கிட்னி ஸ்டோன், விதை2விருட்சம், Diabetics, Sugar, Salt, Sodium Salphate, Blood Pressure, BP, High BP, High Blood Pressure, Uppu, Kidney Stone, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply

%d bloggers like this: