Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: July 16, 2019

இரட்டை வேடம் போடும் நடிகை – அதிர்ந்த இயக்குநர்

இரட்டை வேடம் போடும் நடிகை – அதிர்ந்த இயக்குநர்

இரட்டை வேடம் போடும் நடிகை இந்துஜா - அதிர்ந்த இயக்குநர் இந்துஜா, மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் படங்களில் நடித்தார். இந்துஜா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்துஜா நடிப்பில் ஏ.கே இயக்கும் சூப்பர் டூப்பர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆண்மை தவறேல் படம் மூலம் அறிமுகமான துருவா இதில் நாயகனாக நடித்துள்ளார். இந்துஜா அதிரடி பெண்ணாகவும், சாதாரண பெண்ணாகவும் 2 தோற்றங்களில் அசத்துகிறார். மேலும் ஷாரா, ஆதித்யா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் துருவா இணை தயாரிப்பாளராக இருக்க, ஷாலினி வாசன் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. படம் பற்றி நாயகன் துருவா கூறியதாவது-: ’இயக்குநர் ஏ.கே ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த ம
பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். = ம‌லர் #பிங்க், #ரோஸ், #உதடு, #இதழ், #உதடுகள், #இதழ்கள், #தேன், #மசாஜ், #விதை2விருட்சம், #Pink, #Rose, #Lip, #Lips, #Honey, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
கால் விரல் நகத்தின் ஓரங்களில் மண், அழுக்கு சேர்ந்து விட்டதா?

கால் விரல் நகத்தின் ஓரங்களில் மண், அழுக்கு சேர்ந்து விட்டதா?

கால் விரல் நகத்தின் ஓரங்களில் மண், அழுக்கு சேர்ந்து விட்டதா? கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் அல்ல‍து அழுக்கு சேர்ந்து விட்டால், நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். - இராமசந்திரன் #கால், #விரல், #நகம், #நகங்கள், #அழுக்கு, #மண், #விதை2விருட்சம், #Leg, #Finger, #Nail, #Nails, #Dirty, #Sand, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு பொதுவாக பலர் ஆங்கிலத்தில் தேதி குறிப்பிடும்போது 15th August, 26th January, 14th February என்று நாம் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறு. அது எப்ப‍டி தவறாகிறது என்பதை இங்கே காண்போம். 15th August என்று குறிப்பிட்டால் அது 15ஆவது ஆகஸ்டு மாதம் என்பது பொருள்படும். அதாவது முதலாவது ஆகஸ்டு , இரண்டாவது ஆகஸ்டு, மூன்றாவது ஆகஸ்டு . . . . இந்த வரிசையில் 15ஆவது ஆகஸ்டு என்றே பொருள் தருகிறது. மாதத்தில் வரும் நாட்களை அல்ல‍து தேதியை இது குறிப்பதாக இல்லை என்பது புலனாகிறது. சரி இதனை எப்ப‍டி சரியாக குறிப்பிடலாம் என்பதை இப்போது காணலாம். தமிழில் எழுதும்போது ஆகஸ்டு மாதம், 15ஆம் தேதி என்றும்ஆங்கிலத்தில் எழுதும்போது 15th August என்றும் குறிப்பிடுவதே மிகச்சரி = விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #தேதி, #நாள், #மாதம், #ஜனவரி, #பிப்ரவரி, #மா