Sunday, December 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வழியே திரு மோஹன் வைத்தியா அவர்களை நான் பார்த்தேன் அவரது பாடும் திறனும் அவரது அமைதியான பேச்சும் என்னை அப்ப‍டியே கட்டிப்போட்டு விட்ட‍து. அதுமுதல் அவர் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போதெல்லாம் விரும்பி பார்த்து மகிழ்வேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியதையும், மதிப்பும் தானாகவே வந்தது. அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாத்த‍ம் வாங்க வேண்டும் என்ற தீராத ஆசையும் எனக்குள் சென்ற வாரம் வரை இருந்தது. இவரது மனைவியின் நிலை குறித்தும், அவரது இறப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிந்து மிகவும் மனம் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்ற வாரம் வரை எனக்குள் இருந்த மோகன் வைத்தியா கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி தொலைதூரம் சென்றுவிட்டார்.

புன்னகை மன்ன‍ன் திரைப்படத்தில் தொடங்கி இன்று வரை முத்த‍க் காட்சியிலும் கட்டிபிடிக்கும் காட்சியிலும் நமது உலகநாயகன் கமல்ஹாசனே முதல் இடத்தில் இருந்து வந்துள்ளார். ஆனால் நமது உலகநாயகனை கமல்ஹாசனையே மிஞ்சி விட்டார். நமது அபிமான சின்ன‍த்திரை நட்சத்திரம் திரு. மோஹன் வைத்தியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது பகுதியில் கவிஞர் சிநேகன் மீது வந்த விமர்சனம் அவர் பெண்களை அடிக்கடி கட்டிப்பிடித்துக் கொள்கிறார் என்ற ஒற்றை விமர்சனமே எழுந்தது. ஆனால் திரு. மோகன் வைத்யா அவர்களோ, ஒருபடி மேலேபோய் அடிக்க‍டி பெண்களிடம் வலிய சென்று, (குறிப்பாக வனிதா விஜயகுமார், மீரா மிதுன், ரேஷ்மா, சாக்ஷி, ஷெரின்) அவர்களுக்கு முத்த மழை பொழிவதும், தனக்கும் ஒரு முத்த‍ம் வேண்டும் என்று கேட்டு முத்தத்தை பிச்சை எடுத்து பெறுவதும் எனக்குள் அவர் பற்றிய நன்மதிப்பை முற்றிலுமாக சீர்குலைத்தது. என்னதான் தந்தை ஸ்தானத்தில் இருந்தாலும், பழகினாலும் அதற்கு ஒரு எல்லை வேண்டாமா? எனக்கு இமயம் போன்று உயர்ந்த இருந்த மனிதரின் இன்னொரு பக்க‍ம் இவ்வ‍ளவு கேவலமாக இருப்ப‍தை அறிந்து வேதனை அடைகிறது என் மனம். அந்த வேதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த வேதனை பாதியாக குறையும் என்று நம்புகிறேன்.

இவரது சகோதரர் திரு. இராஜேஷ் வைத்யாவின் அதிரடி வீணை இசைக்கு நான் அடிமை. ஆனால் மோகன் வைத்யா அவர்களைப் போல் அவரது தம்பியும் இருப்பாரோ என்ற எண்ண‍ம் எனக்குள் இயற்கையாகவே எழுகிறது.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#மோஹன்_வைத்யா, #மோகன்_வைத்யா, #வனிதா, #விஜயகுமார், #மீரா_மிதுன், #ரேஷ்மா, #சாக்ஷி, #ஷெரின், #மோகன், #பிக்பாஸ், #தமிழ்_பிக்பாஸ், #பிக்பாஸ்_தமிழ், #விஐய்_தொலைக்காட்சி, #விதை2விருட்சம், #Mohan_Vaidya, #Mogan_Vaidya, #Mohan, #Mogan, #Vanitha, #Meera_Mithun, #Reshma, #Sakshi, #Biggboss, #Tami_Biggboss, #Biggboss_Tamil, #vijay_television, #vijaytv, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply