Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குட்டையான கழுத்து உடைய பெண்களுக்கான அழகு குறிப்பு

குட்டையான கழுத்து உடைய பெண்களுக்கான அழகு குறிப்பு

பெண்கள் தங்களது உடலுக்கு, நிறத்திற்கு, உயரத்திற்கு, கட்டமைப்புக்கு ஏற்றாற் போல் அழகுபடுத்திக் கொண்டால் அழகு தான் இருந்த போதிலும் அவர்கள் அணியும் அணிகல்ன்கள் எப்படி அணிந்தால் அழகாக தெரிவார்கள் என்பது குறித்து இங்கே காணலாம்.

குட்டையான கழுத்து உடைய பெண்கள், தங்கள் கழுத்தை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும் படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.

காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.

பேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.

=> சுபா

#டீ_ஷர்ட், #கழுத்து, #நெக், #அணிகலன், #காது, #மாட்டல், #பேண்ட், #ஷர்ட், #குட்டை #கழுத்து, #விதை2விருட்சம், #T_Shirt, #Neck, #Short_Neck, #Cosmetics, #Chains, #Bangles, #Ear, #Ear_Ring, #Pant, #Shirt, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply