Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரத்து – காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து – மத்திய பாஜக அரசு அதிரடி

காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து ரத்து – மத்திய பாஜக அரசு அதிரடி

இதற்கிடையே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது. கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப் பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதாவது சட்டப்பேரவை யுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும். இதனையடுத்து, மறு வரையறைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிபுணர்கள் உதவியுடன் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

#சிறப்பு_அந்தஸ்து_ரத்து, #குடியரசுத்தலைவர், #ராம்நாத்_கோவிந்த், #ஜனாதிபதி, #காஷ்மீர், #யூனியன்_பிரதேசம், #விதை2விருட்சம், #Special_Grade_Cancel, #President, #Ramnath_Govindh, #Kashmir, #Union_Predesh, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: