Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

டேய், புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும் – அரண்மனை கிளி

இன்று காலையில் எனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொ்ண்டு, எனது வாகனத்தின் டையர்களில் காற்று குறைவாக இருந்த காரணத்தினால் காற்று அடிக்க காத்திருந்தேன். அங்கே காற்று அடிக்கும் பெண் ஊழியர், இன்னொரு பெண் ஊழியரைப் பார்த்து, ஏண்டி நேத்து நீ அரண்மனை கிளி பாத்தியா, ச்சீ பாவம்டி அந்த ஜானு எவ்வளவு கஷ்டப்படுறா பாரு, அந்த ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம் கொண்டு அர்ஜுன் காலை சரிபண்ண அப்பா அவ என்ன பாடுபடுறா பாரு. என்றவாறே அவர்களின் உரையாடல்கள் ஒரு புறம் தொடர,

சட்டென என் சிந்தனையில், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், ஆங்கில வைத்தியம், பாட்டி வைத்தியம் ஏன் வீட்டு வைத்தியம்கூட கேள்விப்பட்டிருக்கேன் அது என்னடா ஐந்து தலை வாசுகி பாம்பு வைத்தியம்,

அது என்னதா இருக்கும்னு எனது கைபேசியில் உள்ள சூடான நட்சத்திரத்தை அட அதாங்க ஹாட்ஸ்டார்-ஐ திறந்து உள்ளே சென்று கடந்த ஒரு வார தொடர்களை பார்த்தேன். அடபாவிங்களா புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும். ஒரு விபத்தின் போது கால் முடமான அர்ஜுனுக்கு சிகிச்சை அளிக்க அவனது மனைவி ஜானு என்கிற ஜானகி கொடைக்கானல் அருகே உள்ள ஏதோ ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே மூலிகை வைத்தியம் செய்ய முடியாமல் சகுனத்தடை ஏற்பட்டுவிட்டதனால், மேற்கொண்டு அந்த சிகிச்சையை தொடர முடியாது என்றும் அர்ஜுன் மற்றும் ஜானகி இருவரையும் ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு அந்த ஆசிரமத்தை நடத்தி வரும் மருத்துவர் சொல்லிவிடுகிறார்.

இந்நேரத்தில் வேறு உபாயம் இருப்பதை அறிந்து கொண்ட ஜானு, வாசு பாம்பை அழைத்து வந்து, அர்ஜுன் கால்களைச்சுற்றினால் அர்ஜுன் எழுந்து நடப்பான் என்ற நம்பிக்கையின் காரணமாக,

இவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் ஒரு நாள் வாசுகி பாம்பு அதாவது ஐந்து தலை பாம்பு வந்து உணர்வுகளை இழ்நத அர்ஜுனின் கால்களை இறுக்கி பிடிக்கிறது. உடனே கால்களுக்கு உணர்வு வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் மருத்துவர் கொடுக்கும் எண்ணெய்யை தேய்த்து வந்தால் அர்ஜுன் எழுந்து நடமாடலாம் எழுந்து ஓடலாம் என்று சொல்கிறார்.

இந்த எவ்வளவு பெரிய முட்டாள்தனம், டேய் அப்பா, புருடா விடுறதுக்கும் ஒரு அளவு வேணும்

இதில் வேறு கீழே ஒரு வரி சட்டென ஓடி மறையும் அதில் மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக அல்ல. இது முற்றிலும் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமே என்று இருக்கும்.

தலையெழுத்து நமது பெண்களின் மூளை எவ்வளவு மழுங்கி போய் இருக்கிறது என்று இதன்மூலம் கண்கூடாக தெரிகிறது. இதனை ஒளிபர்பபும் விஜய் தொலைக்காட்சிக்கு எனது கடுமையான கண்டனங்களை விதை2விருட்சம் தெரிவித்துக் கொள்கிறது.

= விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#விதை2விருட்சம், #அரண்மனை_கிளி, #அர்ஜுன், #ஜானு, #விஜய்_தொலைக்காட்சி, #மகா_தொடர், #vidhai2virutcham, #Aranmanai_Kili, #Arjun, #Janu, #Vijay_TV, #Mega #Serial, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: