ந டி கை க ள் கு டு மி பி டி ச ண் டை – ப ர ப ர ப் பு
ஜெய் ஹீரோவாக நடிக்கும் எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி”. இது ஜெய்க்கு 25-வது படமாகும். இவருக்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் இப்பாடல் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். ஷெரீப் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியில் அதுல்யா ரவியும் வைபவி சாண்ட்லியாவும் குடுமிபிடி சண்டையும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
.jpg?w=740&ssl=1)
#அதுல்யா_ரவி, #வைபவி_சான்ட்லியா, #ஜெய், #விதை2விருட்சம், #கேப்மாரி, #எஸ்.ஏ_சந்திரசேகர், #vaibhavi_shandilya, #Athulya_Ravi, #Jai, #vidhai2virutcham, #kepmari, #S_A_Chandrasekar, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,