வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

இரண்டு மாங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சில காரணங்களுக்காக வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் படி இம்மாதம் கடந்த 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்ததால் கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்றனர். சுமார் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த வெற்றி பெற்றார். இதன் காரணமாக வேலூர், திமுக.வின் வெற்றி கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் , தளபதி ஸ்டாலின் வீடு, வேலூரில் உள்ள கதிர் ஆனந்த் வீடு உட்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். வேலூர் வெற்றியை அடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் சிறிது நேரத்தில் அதிகாரபூர்வமாக திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவிரு்க்கிறது.
#திமுக, #அதிமுக, #தி.மு.க., #அ.தி.மு.க. #ஏசிசண்முகம், #கதிர்ஆனந்த், #முகஸ்டாலின், #முக_ஸ்டாலின், #அண்ணா_அறிவாலயம், #தளபதி, #வெற்றி, #வேலூர், #மக்களவை, #நாடாளுமன்றம், #விதை2விருட்சம், #DMK, #ADMK, #D.M.K., #A.D.M.K.., #A_C_Shanmugam, #Kathir_Anand, #M_K_Stalin, #MKStalin, #Anna_Arivalayam, #Thalapathy, #Vetri, #Vellore, #Lokh_Sabha, #Parliament, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,