Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

2019, ஆகஸ்டு மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி எழுதிய தல மோடியார் ஆட்சிக்கு முதலில் முதலில் ஒரு ராயல் சல்யூட்

இந்திய தேசம்தான் ஆனால் இந்திய சட்டம் செல்லாது. இந்திய தேசம்தான் ஆனால் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை கிடையாது.

நம்நாடுதான் ஆனால் நம் நாட்டவருக்கு ஒரு மில்லிமீட்டர் இடம் வாங்கக்கூட அனுமதி கிடையாது. மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டி மக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருப்பர். இப்படி ஒரு விசித்திரமான சட்டங்களுடன் தலைப் பகுதியான காஷ்மீர் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. அந்தப் பகுதியும் இனி இந்திய சட்டத்திற்குள் வந்து விடுவதால் ஒரே நாடு ஒரு சட்டம் என்ற இலட்சியம் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது.

துணிச்சலான இந்த முடிவைப் பாராட்டுகிற அதே நேரத்தில் ஏன் இத்தனை அவசரமாய் இந்த முடிவு? ராணுவத்தின் பிடிக்குள் அந்தப் பகுதியை கொண்டு வந்துதான் ஆக வேண்டுமா? இந்தப் பகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்க வேண்டாமா? குறைந்த பட்சம் அனைத்துக் கட்சிகளுடன் கலந்து பேசியிரு்கக வேண்டாமா? எதற்கு இத்தனை வேகம்? ஏன் இவ்வளவு பரபரப்பு? என்று கேட்கத் தோன்றுகிறது.

மோட்டார் வாகனச் சட்டத்திரு்த்த மசோதா ஒரு நதிநீர் தீர்ப்பாய மசோதா, பயங்கரவாத சட்ட மசோதா, முத்தலாக் தடை சட்ட மசோதா என எல்லா மசோதாங்களும் விலை வாசியை விட வேகமாய் ஒரே மூச்சில் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் என்ன? ஆட்சியலமர்ந்து நூறு நாட்களுக்குள் தாங்கள் நினைத்ததை நினைத்துக் கொண்டிருப்பவை அனைத்தையும் ஒரே கூட்டத் தொடரில் முடித்து விட்டு இந்த அரசு என்ன சாதிக்கப் போகிறது? புரியவில்லை.

இந்த வேகத்தை கருப்பு பண மீட்பு, ஊழல் செய்து விட்டு சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர்களை தண்டித்தல், விவசாய உற்பத்தியைப் பெருக்குதல் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் போன்றவற்றில் காட்டியிருக்க வேண்டாமா?

விவாதங்கள், விமர்சனங்கள், விளக்கங்கள் எதுவுமே இல்லாமல் எதிர்க்கட்சிகளை வெளியேற்றி விட்டு இந்த சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுவது உண்மையான ஜனநாயகமாகத் தெரியவில்லை.

தன்னிடம் பலம் இருக்கிறது. சூழ்நிலையும் சாதகமாக இருக்கிறது என்பதற்காக எதிராளி தளர்ந்தும் சோர்ந்தும் காணப்படும்போது களத்தில் குதிப்பது எப்படி உண்மையான வீரமாக இருக்க முடியும்?

வேகம் விவேகம் அல்ல அவசரம் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்ல தேசத்திதன் தேரோட்டிகளான ஆட்சியாளர்களுக்கும் தான் என்பதை உரத்த சிந்தனையுடன் நினைவூட்டுவோம்.

????????????????????????????????????

திரு.உதயம் ராம் : 94440 11105

நம் உரத்த‍ சிந்தனை ( Nam Uratha Sindhanai ) மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்

ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.

#நம்_உரத்த_சிந்தனை, #உரத்த_சிந்தனை, #தலையங்கம், #விதை2விருட்சம், #வேகம்_விவேகமல்ல, #உதயம்_ராம், #Nam_Uratha_Sindhanai, #Uratha_Sindhanai, #Editorial, #vidhai2virutcham, #vegam_vivegamalla, #Udhayam_Ram, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

One Comment

  • GANA RAMACHANDRAN

    சில சமயங்களில் சில நடவடிக்கை ஐயர்வைத்து நேரம் காலம் பார்த்து முடிவு எடுக்க முடியாது

Leave a Reply