மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஆஸ்திரேயாவில் செயல்படும் எஸ்.பி.எஸ் தமிழ் செய்தி நிறுவனத்து ஒலிமுறையில் விஜய் சேதுபதி பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது.
பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
நான், உங்கள் வீட்டு விஷயங்களில் தலையிட முடியுமா? நீங்கள் தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டு பிரச்னை உங்களுக்குத் தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம்.
ஆனால், ஆளுமை செலுத்த முடியாது. காஷ்மீர் விவகாரம் மிகுந்த மன வேதனையைத் தருகிறது. பருக் அப்துல்லா சிறை வைக்கப் பட்டதாக பேசியதை செய்திகளில் பார்த்தேன். பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்கள் பிரச்னையை அவர்கள் தான் பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
=> தாமரை
#விஜய்_சேதுபதி, #காஷ்மீர், #பிரச்சினை, #இந்தியா, #மோடி, #அமித்ஷா, #லடாக், #ஜம்மு_&_காஷ்மீர், #விதை2விருட்சம், #பெரியார், #Vijay_Sehtupathi, #Kashmir, #India, #Modi, #Amidsha, #Ladak, #Jammu_&_Kashimir, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Periyar,