Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

கடந்த இரண்டு வருடங்களாகத்தான் பல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் விவாத நிகழ்ச்சிகளில் அதாவது நியூஸ் 7 தமிழ் ( #News7_Tamil ) தொலைக்காட்சியில் கேள்வி நேரம், புதிய தலைமுறை ( #Puthiya_Thalaimurai ) தொலைக் காட்சியில் நேர்பட பேசு, சன் தொலைக்காட்சியில் விவாத மேடை, தந்தி ( #Thanthi ) தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து, நியூஸ் 18 (#News_18 ) தொலைக்காட்சியில் காலத்தின் குரல், சத்தியம் ( #Sathiyam ) தொலைக்காட்சியில் சத்தியம் சாத்தியமே உட்பட பல தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறேன். நா்ள்தோறும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைத் தலைப்பாக கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்நத பேச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள் என கலநது கொண்டு, நெறியாளர்களின் கேள்விக்கு தத்தமது கருத்துக்களையும் ஆரோக்கிய விவாதங்களையும் எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் ஆகும். இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்கள், அல்லது பேச்சாளர்கள் அவரவர் கருத்துக்களை முன்வைக்க அவரவர்க்கென்றே நிகழ்ச்சி நெறியாளர்களால் நேரம் தேவையான அளவு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஆனாலும் சில நேரங்களில் விவாதம், விதண்டாவாதமாகவும் சச்சரவாகவும் மாறி, அடுத்தவர்க்கு கொடுத்த நேரத்தில் அவர் பேசும் போது தேவையின்றி இடை மறித்து இவர் பேசுவதும், கத்துவதும் இருக்கிறது. மேலும் நிகழ்ச்சி நெறியாளர்கள், ரொம்பவே சிரமப்பட்டு, நீண்டநேரம் போராடி அவர்களை சமாதானம் செய்து நிகழ்ச்சியை தொடர்கின்றனர். இதற்கே நேரம் செலவழிந்து விடுகின்றது. இதனால் ஆரோக்கியமான விவாதங்களுக்கு நேரமில்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

இதுபோன்ற ஒருவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அவர் பேசும் போது, தேவையின்றி இடைமறித்து பேசுவதில் எல்லா கட்சி பேச்சாளர்களைவிட அதிமுகவின் பேச்சாளர்களே அதிகம் நான் பார்த்த வரையில்…

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், திரு. ஜவஹர் அலி, திருமதி. சிவசங்கரி, திரு. அன்பழகன், திருமதி மகேஷ்வரி, திரு. குறளார் கோபிநாத் மற்றும் சத்தியா உட்பட பலர் இதுபோன்றே ஈடுபட்டு, ஆரோக்கியமான விவாதங்களில் தேவையற்ற கருத்துக்களைக் கூறி, நேரத்தை வீணடித்து வருவது வேதனைக்குறியதே. மேலும் உங்கள் இடைமறித்தலால் பார்வையாளர்களுக்கு உங்கள் மீது ஒருவிதமான வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் கெட்டபெயர்தான் வருகிறது.

ஆகவே தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்கள், தயவுசெய்து, தங்களை மாற்றிக்கொண்டு, அடுத்தவர் பேசும்போது அந்த நேரத்தில் தேவையின்றி இடைமறித்து பேசுவதை கைவிடவேண்டும். அவர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்த கட்சியினரையோ பேசும்போது ஏதாவது உங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துக்களை அவர்கள் பேசிவிட்டால், உடனே பதற்றம் அடையாமல் குறிப்பெடுத்து வைததுக்கொண்டு அவர்கள் பேசி முடித்தவுடன் அதிமுகவினரே உங்கள் நீங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கலாம். இதற்கு என்று நிகழ்ச்சி நெறியாளர்கள் உங்களுக்கு கூடுதலாக சில மணித்துளிகள் ஒதுக்குவார். அப்போது தான் அவர் என்ன சொன்னார் அதற்கு அதிமுக பேச்சாளர்கள் என்ன பதில் கொடுத்தனர், யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது பார்வையாளர்களான எங்களுக்கு புரியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எதிராளியை பேசவிடுங்கள், அவர் பேசி முடித்து நீங்கள் பேசுங்கள். பார்வையாளரான நாங்கள், உங்கள் இருவருடைய கருத்துக்களையும் கேட்க தயாராக இருக்கிறோம்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#சன்_நியூஸ், #நியூஸ்_7_தமிழ், #நியூஸ்_18, #தந்தி_டிவி, #சத்தியம், #விவாத_மேடை, #கேள்வி_நேரம், #காலத்தின்_குரல், #ஆயுத_எழுத்து, #சத்தியம்_சாத்தியமே, #விதை2விருட்சம், #Sun_News, #News_7_Tamil, #News_18, #Thanthi_TV, #Sathiyam_Sathiyame, #Vivadha_Medai, #Kelvi_Neram, #Kalathin_Kural, #Ayudha_Ezhuthu, #Sathiyam_Sathiyame, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply