Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மிரட்டும் மதுமிதா – அலறிய விஜய் டிவி – பதறிய பிக்பாஸ் – போலீஸில் புகார்]

பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 58 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், டைட்டில் வின்னர் பட்டியலில் மாதிரி கருத்து கணிப்பில் 3வது இடத்தை பிடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் சக போட்டியாளர் களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியதுதான் பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்தது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக மதுமிதா சார்பில் எதுவும் பேட்டி கொடுக்கப்படவில்லை. கமல் முன்னிலையில் பேசும் போது கூட மோலோட்டமாகத்தான் அவர் பேசினார். இதனால், எதற்காக மது இப்படி அவசரப்பட்டு இந்த முடிவெடுத்தார் என மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் இந்த புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு தொடர் டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை செய்துகொள்வேன்’ என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ‘விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனையடுத்து பிக்பாஸ் விதியின் படி மதுமிதா வெளியேற்றப் பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மதுமிதா ஒருசில ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், அதில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார்.

ஆனால், கடந்த 19ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மதுமிதா வாய்ஸ் மெசேஜ் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார். அதில், தனக்கு தர வேண்டிய பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் கூறியிருக்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதுமிதா கையை அறுத்துக் கொண்ட விவகாரம் பெரிய பிரச்சினையாக உருமாறிய நிலையில், விஜய் டிவி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை மேலும் அதிகப் படுத்தியுள்ளது. மதுமிதாவை தொடர்பு கொண்டபோது, அவரின் கணவர் இது சம்பந்தமாக போலீஸ் தரப்பிலிருந்து எங்களை விசாரிக்க வில்லை, அந்த போலீஸ் புகார் பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

மேலும், பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மது நடந்து கொண்டதாகவும், கூடுதலாக நிகழ்ச்சி குழுவிடம் பணம் கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை இது தொடர்பான புகார் பதிவு செய்யப் பட்டிருந்தால், அதற்கான விளக்கத்தை அளிக்க மது தயாராக இருப்பதாவும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிய பிரபல நடிகர் டேனி. இதுகுறித்து கூறுகையில், மதுமிதா தன்னிடம் பலவிஷயங்களை கூறவில்லை என்றும் இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸில் போட்டுள்ள அக்ரிமெண்ட்தான். ஆனால் அவருடைய கையை  பார்த்ததும் தன்னுடைய கண்கள் கலங்கி விட்டதாகவும்,  கையில் ஏற்பட்ட காயத்தால் மது வலி தாங்காமல் துடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

செய்தி

#விஜய்_டிவி, #விஜய்_தொலைக்காட்சி, #பிக்பாஸ், #மதுமிதா, #கமல்ஹாசன், #கமல், #ஷெரின், #சேரன், #கஸ்தூரி, #கவின், #சாண்டி, #லாஸ்லியா, #வனிதா, #விதை2விருட்சம், #Vijay_TV, #Vijay_Television, #Biggboss, #bigg_boss, #madhumitha, #Kamalhasan, #Kamal, #Sherin, #Cheran, #Kasthuri, #Kavin, #Sandy, #Losliya, #Vanitha, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

Leave a Reply