மருத்துவமனைமீது நடிகை சரமாரி புகார் – முறைகேடு களையப்பட வேண்டும்

கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், முதன்முதலாக இயக்கியுள்ள படம் ’மெய்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதனிடயே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:- ”காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவ மனைக்கு கட்டணமாக செலுத்தினேன். மருத்துவர்களால் கட்டாயப் படுத்தப்படட காரணத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தது. மருத்துவத் துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்”.
மருத்துவமனைகள் மீது பரபரப்பான புகார் கூறினாலும் அவர் மருத்துவமனையின் பெயரை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
#ஐஸ்வர்யா_ராஜேஷ், #நடிகை, #மெய், #விதை2விருட்சம், #Aishwarya_Rajesh, #Mei, #Actress, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree