Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்

புதிய பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, இந்தியா பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும்.

இந்நிலையில்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

அவர் அளித்த விளக்கத்தில், தற்போது சர்வதேச ஜிடிபி 3.2% ஆக இருக்கிறது. சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நிலை நன்றாகவே உள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எல்லாம் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையை மீட்டெடுக்க சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமானது.

நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள்:-

  • பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
  • பங்குச் சந்தைகளில் முதலீடுகள் செய்வதற்கு ஊக்கம் தரப்படும்.
  • வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படும்.
  • வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வரி விதிப்புகள் சிலவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
  • வட்டிக் குறைப்பு பலன்களை வங்கிகள் இனி அப்படியே மக்களுக்கு வழங்கும்.
  • ஜிஎஸ்டி ரிஃபண்ட் தொகை தொடர்பான பிரச்சனைகள் 60 நாளில் தீர்வு எட்டப்படும்.
  • ஜிஎஸ்டி ரிஃபண்ட் தொகை 30 நாட்களுக்குள் திரும்பத் தரப்படும்.
  • முதலீட்டாளர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சர்சார்ஜ் வரி நீக்கப்படும்.
  • தொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் வங்கிகள் ஆவணங்களைத் திருப்பித் தர வேண்டும்.
  • வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும்.
  • பல்வேறு துறைகளில் சீர்திருத்தத்துக்கு அரசு முன்னுரிமை வழங்கப்படும்.
  • வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அரசு ஒப்பந்தாரர்களுக்கு பணி முடிந்த உடன் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நிதி நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
  • பி.எஸ். IV ரக வாகனங்கள் 2020 மார்ச்சுக்கு பிறகும் சாலைகளில் ஓடலாம்.
  • அரசுத் துறைகளுக்கு புதிய கார்கள் வாங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

#இந்திய_பொருளாதாரம், #பொருளாதாரம், #டாலர், #ரூபாய், #மதிப்பு, #நிர்மலா_சீதாராமன், #நிதியமைச்சர், #நிதி_அமைச்சர், #விதை2விருட்சம், #Indian_Economy, #Economy, #Dollar, #Rupee, #Value, #Nirmala_Sitharaman, #Finance_Minister, #Finance_Minister, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Central, #India,

Leave a Reply