Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புது நடிகையின் திடீர் புரட்சி

புது நடிகையின் திடீர் புரட்சி

அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது என் காதல் புத்தகம். இப்படத்தில் ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது ஜி கமலம். இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து இயக்குனர் கூறும் போது, ‘தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது.

கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர். விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி என்று மிரட்டி யாரையும் கல்விக் கற்கவிடாமல் ஊரையே தனது கட்டுப்பாட்டிலும் பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியும் வைத்திருக்கிறார்.

ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணி (நாயகி அஞ்சிதாஸ்ரீ)க்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது. அதன் காரணமாக தனது தந்தைக்கு எதிராக களம் காணத் தொடங்கி, அந்த ஊரில் ஒரு திடீர் புரட்சியே செய்கிறாள் அதனால், அவளது தந்தையால் அவளுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது. அவள் அதில் வெற்றி பெற்றாளா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இசைக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த படத்தில் டாக்டர் வைக்கம் விஜயலெட்சுமி பாடிய பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் வெள்ளித்திரையில் “இது என் காதல் புத்தகத்தை“ கண்டு படியுங்கள் .

வருங்காலத்தில் இதுபோன்ற ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து கல்வி புரட்சி செய்ய வேண்டுமென்பதே மேற்சொன்ன நடிகை அஞ்சிதா ஸ்ரீ சபதம் செய்திருப்பதாக காற்று வாக்கில் வந்த செய்தி.

#இது_என்_காதல்_புத்தகம், #நடிகை, #அஞ்சிதா_ஸ்ரீ, #அஞ்சிதா_நாயர், #விதை2விருட்சம், #Idhu_En_Kadhal_Puthagam, #Actress, #Anjitha_Sree, #Anjitha_Nair, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: