Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காலை உணவுக்கு மாற்றாக காபி குடிக்கலாமா?

காலை உணவுக்கு மாற்றாக காபி குடிக்கலாமா?

ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும். பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும்.

தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கு மாற்றாக பலர் உட்கொள்கின்றனர்.

ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல. காலை உணவிற்கு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.

உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.இது உங்களை மிகவும் சோர்வாக உணர வைக்கும்.

எனவே காலை உணவுக்கு மாற்றாக காபி குடிப்பதை தவிர்த்து, காபி குடிப்பதற்கு முன் எதையாவது சாப்பிடுவது நல்லது.

#Coffee, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #காபி

Leave a Reply