Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருப்பை இல்லாதவரும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பை இல்லாதவர்களும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும்.

கருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே

கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். இந்தியாவின் வடமாநிலத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்யப் பட்டிருக்கிறது.

பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், செயற்கை முறை கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், அவர்களின் கருப்பையே பலவீனமாக இருக்கும்பட்சத்தில் (குழந்தையைத் தாங்கும் சக்தி இல்லாது போவதால்) நிச்சயம் குழந்தை பேற்றுக்கான வாய்ப்புகள் குறைவு என்கிற நிலைதான் இருந்து வந்தது. இதனால் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குக் குழந்தையின்மை பிரச்னை ஏற்பட்ட நிலையில், இதற்குத் தீர்வாக கருப்பை மாற்று அறுவைசிகிச்சை முறை மருத்துவத் துறையால் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான கர்ப்பப்பை கொண்ட பெண், குழந்தை பேற்றுக்குப் பிறகு, தன் கருப்பையைத் தானமாக வழங்க விரும்பினால் குழந்தையின்மை பிரச்னையைக் குறைக்க முடியும். ஒருவகையில் கருப்பை தானம் என்பது, கிட்னி, இதயம், கல்லீரல் தானம் போன்றது தான். அப்படிப் பொருத்தப்படும் கருப்பையை அந்தப் பெண் ஐந்து வருடம் மட்டுமே உடம்பில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு உடலிலிருந்து கருப்பையை அகற்றிவிடுவார்கள். இல்லை யென்றால் செப்டிக் ஆகத் தொடங்கிவிடும். கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணால் சிசேரியன் முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

=> மாலைமலர்

#கரு, #கருப்பப்பை, #கருப்பை, #கர்ப்பப்பை_மாற்று_அறுவை_சிகிச்சை, #கருப்பை_தானம், #விதை2விருட்சம், #Embryo, #uterus, #hysterectomy, #ovarian_donation, #seed2tree, #Uterus_Transplantation , #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham #uterus_donation

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: