Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றித் தளபதி ஸ்டாலின் – பாஜக பாராட்டு

வெற்றித் தளபதி ஸ்டாலின் – பாஜக பாராட்டு

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமண விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர்களின் ஒருவரான முன்னாள் எம்.பி. சி.பி. ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், கலைஞருக்கு பிறகு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், எங்களை வீழ்த்தி வெற்றி தளபதியாக உள்ளார். அதனால் நாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது உள்ளது. அவரிடம் கற்றுக்கொள்ளவும் அதிகம் இருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் உள்ள சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக காலூன்ற பெரும் தடையாக உள்ள திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள வரை பொது மேடையில் கட்சி பாகுபாடின்றி அவர் இப்படி புகழ்ந்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் விறுவுறுப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.

#தேர்தல், #மக்களவை, #சி.பி.ராதாகிருஷ்ணன், #சி.பி.இராதாகிருஷ்ணன், #பாரதிய_ஜனதா_கட்சி, #பா.ஜ.க., #பாஜக, #திராவிட_முன்னேற்றக்_கழகம், #திமுக, #தி.மு.க., #மு.க.ஸ்டாலின், #ஸ்டாலின், #முகஸ்டாலின், #வெற்றித்தளபதி, #தளபதி, #வெற்றி, #விதை2விருட்சம், #Election, #Parliament, #C_P_ Radhakrishnan, #Baradhiya_Janatha_Party, #B.J.P., #BJP, #DMK, #D.M.K., #Dravida Munnetra Kazhagam, #M.K. Stalin, #MKStalin, #Stalin, #Thalapathy,# Success, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: