Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே உலகமே காத்திருந்தது.

இந்நிலையில் ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க வில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்பிட்டர் மட்டும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றது. இது நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு ஆய்வு செய்யும். மேலும், தென் துருவத்தில் சுற்றுவட்ட பாதையில் ஆர்பிட்டர் சுற்றிவருகின்றது. இது நிலவை ஆய்வு செய்து வருகின்றது.

சந்திரயான்- 2ன் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆர்பிட்டர் 95% பணி செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லேண்டர் நிலவில் தரையிறங்கினாலும் கூட 14 நாட்கள் மட்டும் ஆய்வு செய்து இருக்கும். இந்த திட்டம் முழு தோல்வி என கூற முடியாது என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

நமது சந்திரயான் விண்கலத்தில் இருந்து வந்த தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் “நாம் இதுவரை செய்தது ஒரு சின்ன விஷயம் அல்ல. மிகப் பெரிய விஷயம். தைரியமாக இருங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்” என்று பிரதமர் மோடி இஸ்ரோ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

#விக்ரம், #லேண்டர், #விக்ரம்_லேண்டர், #ஆர்பிட்டர், #சந்திரயான், #சந்திரயான்_2, #இஸ்ரோ, #மோடி, #விஞ்ஞானி, #சிவன், #விதை2விருட்சம், #chandrayaan 2, #chandrayaan, #orbittor, #vikram_lander, #vikram, #lander, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, Isro,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: