Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த லுக்கில் ரஜினியின் உடல், நல்ல திடகாத்திரமான ஒரு இளைஞனின் உடல் போன்று தெரிகிறது. நம்ம ரஜினியின் வயதோ 68. இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தபோது இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. அதன் காரணமாகவே தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது என்ற கேள்வியே இங்கு எழுகிறது.

#Darbar, #Rajini, #Rajinikanth, #AR_Murugadoss, #தர்பார், #ரஜினி, #ரஜினிகாந்த், #ஏஆர்_முருகதாஸ், #விதை2விருட்சம்,# vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: