Saturday, October 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் சுபஸ்ரீ பேசுகிறேன் – உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா? -வீடியோ

நான் சுபஸ்ரீ பேசுகிறேன்… உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா?” -வீடியோ

கடந்த வாரத்தில் (12/09/2019) அன்று சூரிய அஸ்தமனத்தை கண்ட என் தாய்க்கு தெரியாது நானும் அன்று அஸ்தமனம் அடைவேன் என்று, அன்று வீசிய காற்றுக்கு தெரியாது அது ஒரு பூவைத் தான் கவிழ்க்க போகிறது என்று. ஆம் நான் சுபஸ்ரீ பேசுகிறேன்…,

குரோம்பேட்டையில் ஒரு குட்டி வீடு. வீட்டின் உள்ளே சென்றால் ஒரு அழகிய தேவதை. அது நான் தான். அந்த வீட்டினுள் சென்றால், குயிலின் சத்தம் கேட்கும். குயிலை தோடாதீர்கள். அது என் குரல் தான். பத்து மயிலிறகுகள் இருக்கும், அது என் விரல் தான்.

அன்புள்ள தாய், கம்பீர தந்தை என்னை வழி அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு தெரியாது அன்று மதியமே நான் குழிக்குள் செல்வேன் என்று. பணி முடிந்த கையோடு, வீடு திரும்பினேன். புயல் வேகத்தில் அல்ல, மென் தென்றல் வேகத்தில் தான். திடிரென விழுந்தது, ஒரு பதாகை.

தினறி கீழே விழுந்தேன். புயல் வேகத்தில் வந்த லாரி, என் உயிரை ருசிப் பார்த்தது. அந்த சாலைகளுக்கு எவ்வளவு நாள் தாகமோ என்று தெரியவில்லை, ஒரு தேவதையின் ரத்தம் குடிக்க. வயிறு முட்டக் குடித்தது. என் வாழ்க்கை பயணமும் அன்றே முடிந்தது.

உங்களின் பேனர் அரசியலுக்கு நான் தான் பலியா. போதும் நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் தலைவர்களே சொல்லிவிட்டார்கள். பேச்சுக்காக சொன்னார்களா அல்லது என் உயிர் மூச்சுக்காக சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால் சொல்லி விட்டார்கள், அதையாவது கேளுங்கள்.

இன்னும் நிறைய சுபஸ்ரீ-க்கள் வாழ வேண்டியிருக்கிறது. இன்னும் நிறைய தாய்களின் நம்பிக்கை வளர்ந்துக்கொண்டிருக்கிறது. இனிமேலாவது பேனர் வைப்பதை நிறுத்துங்கள், உங்களின் விஸ்வாசத்தை நல்ல காரியங்களால் நடத்துங்கள்.. கண்ணீருடன் முடிக்கிறேன்.

இப்படிக்கு நான் சுபஸ்ரீ..,
(சத்தியம் டிவியின் வலைதள உதவி ஆசிரியர் கார்த்திக்குடன் செய்திக்குழு)

#சுபஸ்ரீ, #பள்ளிக்கரனை, #அதிமுக, #பேனர், #பேனர்_விழுந்து_விபத்து, #மரணம், #சாவு, #அரசியல், #பேனர்_அரசியல், #விதை2விருட்சம், #Subashri, #Subasri, #ADMK, #Banner, #Banner_Killed_Girl, #Death, #Politics, #Banner_Politics, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply