திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர்.
அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதாக இதன் ஆராய்ச்சியாளர் அலிசன் வில்சன் கூறியுள்ளார். மேலும் அதில் உடல் மேல் இருந்த கை தானாக நகர்ந்து அசைந்தக் காட்சிகளைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.
இறந்த பிறகு உடலின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிடும் என நம்பப்பட்டு வரும் நிலையில் இந்த ஆய்வு உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
முக்கியமாக இதன் ஆராய்ச்சியாளர் வில்சன் “ இறந்த உடல் சிதைவதற்கு முன்னர் அசைவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் இறந்த பிறகு 17 மாதங்களும் உடல் அசைந்த காட்சிகள்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்றுக் கூறியுள்ளார்.
இது ஒரு வேளை உடல் சிதைவதற்கான செயலாகவும் இருக்கலாம் என நினைப்பதாகவும் கூறுகிறார். எனவே இது விளக்கமுடியாதவை என்றும் குறிப்பிடுகிறார்.
உடல் நகர்வது என்பது சக மனிதனால் அல்லது விலங்குகளால் மட்டுமே செய்ய முடியும். அதுவரையில் அந்த உடல் இருந்த இடத்தில் அப்படியே தான் இருக்கும் என்பது அனைவருடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த ஆய்வு. இந்த ஆராய்ச்சி புலன் விசாரணை சந்தேகங்களுக்கும் விடையாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆராய்ச்சியாளர்.
#திக்திக்_திகில், #இறந்தவர்_உடல், #30_நிமிடத்திற்கு_ஒருமுறை, #மரணம், #சாவு, #இறப்பு, #சடலம், #பிணம், #மர்மம், #ஆராய்ச்சி, #அதிசயம், #ஆஸ்திரேலியா, #சிதைவு_ஆராய்ச்சி நிலைய, #தடவியல், #ஆராய்ச்சியாளர், #வில்சன், #விதை2விருட்சம், #Thick_Thick, #Horror, #Dead_Body, #30_Minutes, #Death, #Corpse, #Mystery, #Research, #Miracle, #Australia, #Forensic #Researcher, #Wilson, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
news18