Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

பொதுவாக எல்லோரும் படித்துத்தான் கிழிப்பார்கள். ஆனால் பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்து இருக்கிறார். பிக்பாஸ் 93 நாட்களைக் கடந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினர்களாக கடந்த சீசன் போட்டியாளர்கள் மகத்தும் யாஷிகாவும் வருகை தந்தனர். அப்போது ஷெரினிடம் யாஷிகா, “உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யாரேனும் ஒருவருக்கு நீங்கள் எதாவது எழுதுங்கள்”‘ என்று தெரிவித்தார். உடனே தனது படுக்கைக்கு ஓடிச் சென்று அங்கு அமர்ந்து, தர்ஷன் பற்றி எழுதினார் ஷெரின். இதனை அவர் யாருக்கும் காட்டாத நிலையில், கேமரா மட்டும் நன்றாக படம் பிடித்துள்ளது.

”மேகமூட்டமான நாளில் நீ என் சூரிய ஒளி, நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது. எனது இருண்ட பகுதிகளை நீதான் ஒளிரச் செய்கிறாய்” என்று ஷெரின் எழுதியது இணையத்திலும் வைரலாகி உள்ளது. தான் எழுதியதை யாருக்கும் காட்டாத நிலையில், யாஷிகா மற்றும் மகத்திற்கு பிக்பாஸ் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினாரோ அதனை அவரிடம் கொடுக்க வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், இது தன்னால் முடியாது என்று கூறி ஷெரின் அந்த லெட்டரை கிழித்து, குப்பைத் தொட்டியில் போடாமல் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார் ஷெரின்.

இதனை எதிர்பாராத தர்ஷன், தனக்குதான் ஷெரின் லெட்டர் எழுதிருப்பார் என்று எண்ணி, குப்பைத்தொட்டியில் தேடிப்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், தர்ஷன் கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொண்டார். அதன் பிறகு இரவு தூங்குவதற்கு முன்பாக மீண்டும் லெட்டர் எழுதி பாதுகாப்பாக வைத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அதனை கொடுத்துவிட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#பிக்பாஸ், #ஷெரின், #செரின், #தர்ஷன், #தர்ஸன், #யாஷிகா, #யாசிகா, #மகத், #கடிதம், #விதை2விருட்சம், #Biggboss, #Sherin, #Tharshan, #Yashika, #Mahath, #Letter, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: