Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிக்பாஸ்- பணத்துக்காக காதலை மறந்த கவின் – கதறும் லாஸ்லியா

பிக்பாஸ்- பணத்துக்காக காதலை மறந்த கவின் – கதறும் லாஸ்லியா

பிக்பாஸ் -3 தொடங்கியதில் கவின் மீது பெரும் பாலான மக்களுக்கு வெறுப்புதான் ஏற்பட்டிருக்கிறது. காரணம், தொடக்கத்தில் இவரது காதல் விளையாட்டில் முதலில் சிக்கியது அபிராமி, அடுத்தது நடிகை சாக்ஷி, மூன்றாவதாக லாஸ்லியா.. இதில் அபிராமி, சாக்ஷியுடனான காதல் விளையாட்டைவிட லாஸ்லியாவுடனான காதல் விளையாட்டு தான் படுசீரியஸாக போனது. அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசனே இவர்களை பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்திருக்கிறார். இதில் போதாக் குறைக்கு லாஸ்லியாவின் தந்தை, லாஸ்லியாவை கடுமையாக எச்சரித்தும், அறிவுரை வழங்கினார். அதன்பிறகு சில நாட்கள் ஒழுங்காக இருந்த லாஸ்லியாவை வேண்டுமென்றே கவின் சீண்டினார். இதன்காரணமாக கவின்-லாஸ்லியா காதல் பகுதி-2 தொடர்ந்தது. இதற்கிடையே லாஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரினை சீண்டினார். இதற்கு ஷெரின் தக்க பதிலடி தந்ததாலும், லாஸ்லியாவிடம் எதிர்பார்த்தளவு எதிர்ப்பு வராததாலும் ஷெரின் பின்னாடி சுற்றுவதை நிறுத்தினார்.. இப்போது பிக்பாஸ் கொடுத்த ரூபாய் ஐந்து இலட்சத்தை பார்த்ததும், லாஸ்லியாவின் காதலை மறந்தும் மறுத்தும் ஐந்து இலட்சத்தை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியேறியுள்ளார். அவர் வெளியேறிய பிறகும் லாஸ்லியா கதறி அழுகிறார். மேலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு இன்றிரவு பாருங்கள்.

இதுதான் காதலுக்கு கவின் கொடுக்கும் மதிப்பு. கவின் போன்றவர் களிடம்தான் இதுபோன்ற பெண்கள் மயங்கி காதலில் விழுந்து, தனது வாழ்க்கையை வீணாக்குவது, ஒரு தகப்பனாக வேதனையின் உச்சத்தில் இருந்து இந்த கட்டுரையை வடிக்கிறேன்.

  • விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081

#பிக்பாஸ், #விஜய்_டி.வி., #விஜய்_தொலைக்காட்சி, #கவின், #லாஸ்லியா, #காதல், #ரொமான்ஸ், #ஐந்து_இலட்சம், #விதை2விருட்சம், #சாண்டி, #ஷெரின், #முகின், #தர்ஷன், #BIGGBOSS, #Vijay_TV, #BIGG_BOSS, #Kavin, #Losliya, #Love, #Romance, #Five_Lakh, #vidai2ivirutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply