Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

தமிழை இரண்டாம் மொழியாக ஹரியானா அப்போது அறிவித்ததன் பின்னணி இதுதான்! ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார், மேடையில், தமிழில் பேசுகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே!

ஏதாவது ஒரு வழியில் தமிழகத்தில் இந்தியைத் திணிப்பது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்! சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி திகழ வேண்டுமென்று கருத்துக்கூறி பலத்த எதிர்ப்பு கிளம்ப `அதாவது நான் என்ன சொன்னேன்னா…’ என மழுப்பினார். ஆனால், இந்தி மொழியைக் காப்பதற்காகத் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவித்த கதை ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன் வட மாநிலத்தில் நடந்துள்ளது.

அந்த மாநிலம் ஹரியானா. இத்தனைக்கும் ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார். மேடையில், தமிழில் பேசுகிறார்!

அந்த மாநிலம் ஹரியானா. இத்தனைக்கும் ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார். மேடையில், தமிழில் பேசுகிறார்!

ஹரியானா மாநிலத்தில், பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பா.ஜ.க-வைச் சேர்ந்த அந்த மாநில முதல்வரான மனோகர் லால் கட்டாருக்குத் தமிழ், தமிழர்கள் மீது அதீத ஈடுபாடு. தமிழர்கள் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழாவில், அவரும் கலந்து கொள்வார். கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை விழாவில், மேடை ஏறிய கட்டார், வணக்கம்' என்று தமிழில் பேசத் தொடங்கினார். பொதுவாக இப்படி பேசத் தொடங்கிவிட்டு, தங்கள் மொழிக்கு மாறிப்பேசுவதை அரசியல்வாதிகள் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இங்கே, கட்டாரோ தொடர்ந்து சில நிமிடங்கள் தமிழில் பேசினார். கொஞ்சம்உதித் நாராயணன் வகை’த் தமிழ்தான் என்றாலும் அவரது பேச்சைக் கேட்டு எழுந்த கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. 40 வருடங்களுக்கு முன் தமிழகம் வந்ததாகவும், ஈரோடு, சேலம், சென்னை என்று 20 நாள்கள் இருந்ததாகவும் கூறுகிறார் மனோகர் லால். அப்போது தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் விருப்பம் அதிகமாக, பெங்களூரில் ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்து தமிழைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், தமிழ் பேசும் மக்களைச் சந்தித்தால், அவர்களிடத்தில் தமிழில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளேன் என்று மனோகர் லால் கட்டார் குறிப்பிட்டார். தன் ஆட்சிக் காலத்தின் போது, மீண்டும் தமிழை ஹரியானாவின் அரசு மொழியாக மாற்றுவேன் எனவும் கட்டார் வாக்குறுதி கொடுத்தார். அதோடு, தான் தமிழில் பேசிய காணொலியையும் ட்விட்டரில் மனோகர் லால் கட்டார் வெளியிட்டார்.

கட்டார் சொன்னது உண்மைதான். ஹரியானாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழ் மொழி இரண்டாவது அலுவல் மொழியாக இருந்தது. ஹரியானாவில் தமிழ் மொழி அலுவல் மொழி ஆக்கப்பட்டதற்கு மொழி அரசியல் பின்னணியும் உண்டு. கடந்த 1966-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா பிரிந்தது. ஹரியானாவில் பஞ்சாபிகளும் அதிகமாக வசித்தனர். இவர்களின் தாய் மொழி பஞ்சாபி.

பங்காளிகள் பிரிந்தால் சச்சரவுகள்தானே ஏற்படும். தண்ணீர் பங்கீட்டிலிருந்து பல பிரச்னைகளுக்காக இரு மாநிலங்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டன. இப்போது வரைக்கும் இரு மாநிலங்களுக்கும் சண்டிகர் நகரம்தான் பொதுவான தலைநகராக உள்ளது. ஹரியானா தனக்கென்று தனியாகத் தனி தலைநகரை உருவாக்கிக் கொள்ளவில்லை.

பன்சிலால்

ஹரியானா மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் இந்தி பேசுபவர்கள். இதனால், அலுவல மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பஞ்சாபி பேசும் மக்கள், தங்கள் மொழியை இரண்டாவது அலுவல் மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்த போதுதான் பிரச்னை எழுந்தது. பஞ்சாபியை அலுவல் மொழியாக்கினால், இந்தி மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக, இருக்கும் என அப்போதைய ஹரியானா முதல்வர் பன்சி லால் கருதினார். இதனால், பஞ்சாபிக்கு முக்கியத்துவம் கொடுக்க பன்சி லால் விரும்பவில்லை. உடனடியாக, அவரின் நினைவுக்கு வந்தது உலகின் மூத்த மொழியான தமிழ்தான். தயக்கமே இல்லாமல் ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாகத் தமிழை அறிவித்தார் பன்சிலால்.

அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. `ஹரியானாவில் தமிழை அலுவல் மொழியாக்கி னால், வட இந்திய மாநிலம் ஒன்றில் தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டிருக்கிறது. நாமும் இந்தியை எதிர்க்கக் கூடாது எனத் தமிழர்கள் கருதுவார்கள்’ என்றும் பன்சி லால் நினைத்தார். இதுவும் ஹரியானாவில் தமிழ் அலுவல் மொழியாக ஒரு காரணமாக இருந்தது. ஹரியானாவில் பன்சி லாலுக்குப் பிறகு பல முதல்வர்கள் மாறினாலும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஹரியானாவில் தமிழ் இரண்டாவது அலுவல் மொழியாக இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு ஹரியானா முதல்வராகப் பதவியேற்ற பூபிந்தர் சிங் ஹூடா, தமிழை நீக்கிவிட்டு, பஞ்சாபியை இரண்டாவது அலுவல் மொழியாக்கினார்.

இந்தி மொழியைப் பாதுகாக்கத் தமிழ், எப்படியெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளது பார்த்தீர்களா?

=> எம்.குமரேசன், விகடன்

#ஹரியானா, #முதல்வர், #பூபிந்தர்_சிங்_ஹூடா, #தமிழ், #பஞ்சாபி, #அலுவல்_மொழி, #தமிழ், #தமிழ்_மொழி, #இந்தி, #இந்தி_மொழி, #பன்சிலால், #விதை2விருட்சம், #Hariyana, #Haryana, #Chief_Minister, #CM, #Boobinthan_Singh_Hoods, #Tamil, #Thamizh, #Panjabi, #Official_Language, #Tamil_Language, #Hindi, #Bansilal, #vidhai2virutcham, #vidhaitovirutcham,#seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: