Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

இந்திய-பாகிஸ்தான் போர் – 1971ஆம் ஆண்டில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியது. சோவியத் யூனியன், “இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை”ன்னு, பாகிஸ்தானை எச்சரிக்கின்றது .

ஆனால் அந்த காலகட்டத்துல், பாகிஸ்தானுக்கு பல வலிமையான மேற்கத்திய நாடுகளுடைய ஆதரவு இருந்தது.

சோவியத் யூனியனும், ‘இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்’ன்ற ரீதியாக அறிக்கை கொடுத்துவிட்டு, நடப்பாதை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால்… டிசம்பர் 3-ம் தேதி மாலை,

இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில், பாகிஸ்தான்… திடீரென்று ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள்மேல், கடுமையான தாக்குதல் நடத்தி முடித்துவிட்டது.

உடனடியாக பிரதமர் இந்திரா காந்தி, “பாகிஸ்தானுடன் போர் ஆரம்பம்”ன்ற செய்தியை, நாட்டுமக்களுக்கு ரேடியோவில் அறிவித்தார். இந்தியாவோட முப்படைகளும் பாகிஸ்தானை சூழ்ந்து, மிகப்பெரிய தாக்குதல்களை ஆரம்பித்தது.

டிசம்பர் 4-ம் தேதி இரவு… இந்திய கடற்படை, கராச்சி துறைமுகத்தை சின்னா பின்னமாக சிதறடித்துவிட்டு, இந்திய எல்லைக்குள் வந்துவிட்டது.

இதில் கொடுமை என்னவென்றால்… கராச்சி துறைமுகத்தை காப்பாற்ற வந்த பாக். போர் விமானங்கள், துறைமுகத்தில் நிற்பது தங்களுடைய போர் கப்பல்னுகூட தெரியாம, ‘PNS ஜுல்பிஹர்’ ன்ற தங்களோட ராணுவ கப்பலையே தாக்கி அழித்து விட்டது.

தொடர்ந்து… நிறைய மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்க… அதுவரைக்கும் இந்தியாவின் கைக்குள் இருந்த போர்களம், கையைவிட்டு நழுவ ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது. அமெரிக்க அதிபர் நிக்ஸன்… ஜோர்டான், ஈரான், பிரான்ஸ், துருக்கி நாடுகளோட போர் விமானங்களை, பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

மேலும்… அமெரிக்க கடற்படையின் ‘செவன்த் ப்ளீட்’ன்ற பிரிவை, பிரிட்டனோட கடற்படையோட சேர்ந்து, இந்திய நகரங்களை தாக்குவதற்காக வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வைத்தார் நிக்ஸன்.

(இந்த ‘செவன்த் ப்ளீட்’ன்றது… 70 போர் கப்பல்கள், 300 போர் விமானங்கள், 40 ஆயிரம் வீரர்களை கொண்ட…. அமெரிக்க கடற்படையோட மிகப்பெரிய பிரிவு)

மேலும்… தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கு உதவச்சொல்லி, சீனாவையும் அழைத்தார். அத்துடன் விடவில்லை… USS Enterprise-ன்ற மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலையும், வங்காள விரிகுடாவுக்கு அனுப்பிவைத்தார்.

அந்த கப்பலுடன் சேர்ந்து, பிரிட்டனுடைய ‘HMS Eagle’-ன்ற மிகப் பெரிய போர் கப்பலும், பாகிஸ்தானுக்கு உதவி செய்ய, இந்தியா வோட கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவுக்கு அணிவகுத்து வந்தது.

உலகத்தின் பெரும்பாலான வல்லரசுகள், ‘இந்தியா’ என்னும் ஒற்றை நாட்டுக்கு எதிராக ‘சக்கர வியூகம்’ வகுத்து, இந்தியாவை சுற்றி வளைத்து நிற்கின்றது.

அப்போதுதான்… உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

அந்த காலகட்டத்தில், அமெரிக்காவை நடுநடுங்க வைத்த சோவியத் யூனியன், வலதுகாலை எடுத்துவைத்து இந்தியாவுக்கு ஆதரவாக போர்களத்தில் களமிறங்கியது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கும் அத்தனை நாடுகளையும், “இந்தியா மேல் துரும்பு பட்டாலும், நேரடியாக உங்கள் நாடுகளை தாக்குவோம்” என்னு எச்சரித்தது.

கொஞ்சம் துள்ளிப் பார்த்த சீனாவை, “விலகிக்கோ… இல்லேன்னா உன்னோட ‘சிங்கியாங்க்’ பகுதியை தவிடு பொடியாக்குவோம்”ன்னு, நேரடியாக முறைத்தது. (‘சிங்கியாங்க்’ சீனாவோட மிகமுக்கியமான ராணுவதளம் உள்ள பகுதி)

வேற எந்த நாட்டையும்விட, ரஷ்யாவோட ராணுவ பலத்தைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்த சீனா, ‘வம்பு வேண்டாம்’னு போர்களத்ததை விட்டு விலகிவிட்டது.

அதுவரைக்கும் தனியாவே போராடிய இந்தியா…

சோவியத் துணைக்கு வந்த உற்சாகத்தில், பாகிஸ்தானின் பல பகுதிகளுக்குள் நேரடியாக புகுந்து தரை மட்டமாக்கியது. பாகிஸ்தானை புரட்டி எடுத்தது.

சோவியத் யூனியன்… சொன்னது மட்டுமில்லாமல், அதுவரைக்கும் உலகத்திற்கு காட்டாத தன்னுடைய நவீன போர்விமானங்கள், விமானம் தாங்கி போர்கப்பல்களை வங்காள விரிகுடாவில் இறக்கியது.

முக்கியமாக… போர் களத்துலிருந்து அமெரிக்கா, பிரிட்டனை பின் வாங்கச்செய்ய, தன்னுடைய ‘அணு நீர்மூழ்கி கப்பல்’களை கொண்டு வந்து வங்காள விரிகுடாவில், ஓப்பனாக நிப்பாட்டியது.

இந்தியாவுக்கு ஆதரவாக… வங்காள விரிகுடாவில் அவ்வளவு பெரிய அரணமைத்து நிற்கும், சோவியத்தின் அணு நீர்மூழ்கிக் கப்பல்களை பார்த்த அமெரிக்க கப்பற்படை அதிர்ந்தது.

உடனடியாக பிரிட்டனுடைய ‘HMS Eagle’-ஐ போர் களத்துலிருந்து மடைமாற்றி… மடகாஸ்கருக்கு அனுப்பி விட்டார்கள். இப்படியே அமெரிக்கா உட்பட, பாக்.குக்கு ஆதரவான ஒவ்வொரு நாடும், சோவியத் மேலான பயத்தில், மிரண்டு போய் போர்களத்தை விட்டு பின்வாங்கி வெளியேறியது. (காரணம்… சோவித் யூனியனிடம் இருந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்! உட்கார்ந்த இடத்திலிருத்து அடிப்பார்கள்).

பாகிஸ்தானால், தனியாக இந்தியாவை சமாளிக்க முடியாமல்… 13- நாள் போர் முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தான் தன் 90 ஆயிரம் ராணுவ வீரர்களுடன் இந்தியாவிடம் சரணடைந்தது. (பத்து மாதம் அவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் வைத்திருந்து, பத்திரமாக திருப்பி ஒப்படைத்தோம்) பங்களாதேஷ் என்ற தேசம் மலர்ந்தது.

நம்முடைய மோசமான காலகட்டத்தில், நமக்கு துணையாக நின்ற ஒரே நாடு சோவியத் யூனியன்தான். அதனால் தான் இன்னைக்கு வரைக்கும் ரஷ்யாவை, இந்தியாவின் உற்ற நண்பன்னு சொல்றோம்!

#இந்தியா, #பாகிஸ்தான், #ரஷ்யா, #அமெரிக்கா, #நிக்ஸன், #இந்திரா_காந்தி, #போர், #பங்களாதேஷ், #சோவியத்_யூனியன், #கண்டம்_விட்டு_கண்டம்_பாயும்_ஏவுகணை, #சீனா, #ஏவுகணை, #எச்_எம்_எஸ்_ஈகிள், #HMS_Eagle , #விதை2விருட்சம், #India, #Pakistan, #Russia, #US, #Nixon, #Indira_Gandhi, #War, #Bangladesh, #Soviet_Union, #Continental_Missile, #China, #Missile, #HMS_Eagle, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #IndoPakWar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: