மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய
மூக்கு கண்ணாடி தொடர்ச்சியாக அணிபவர்களுக்கு அவர்களின் மூக்கின் மேற்பகுதியில் இருபக்கமும் கோடுகள் (தழும்புகள்) பதிந்துவிடும் இதனால் முகத்தின் அழகு கொஞ்சம் குறைந்திருக்கும்.
இதுபோன்று கண்ணாடி அணிவதினால் ஏற்படும் கோடு அதாவது தழும்பு மறைய ஓர் எளிய குறிப்பு.
தோல் சீவிய வெள்ளரிக்காய் பாதியையும், ஒரு தக்காளியையும் எடுத்து தனித்தனியாக மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனித்தனியாக இருவேறு கிண்ணங்களில் எடுத்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கிண்ணத்தில், வெள்ளரிக்காய் பேஸ்ட்டையும், சிறிது தக்காளி பேஸ்டையும் சேர்த்து கலநது அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerin)யும் சேர்த்து நன்றாக கலந்து, மூக்கில் ஏற்பட்டுள்ள கோடுகள் மீது இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள்.
இதேபோன்று தினமும் இரவு தூங்குவதற்குமுன் மூக்கின் மீது மேற்சொன்ன கலவையை தடவி, மறுநாள் காலை முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி வர வேண்டும். விரைவில் மூக்கு கண்ணாடி தழும்பு மறைய (Spectacle Marks) தொடங்குவதை நீங்களே கண்ணாடியில் கண்கூடாக காணலாம்.
#மூக்கு_கண்ணாடி, #தழும்பு, #மூக்கு, #வெள்ளரிக்காய், #தக்காளி, #தேன், #கிளிசரின், #Glycerin, #கோடுகள், #மூக்கு_கண்ணாடி_தழும்பு, #Spectacle_Marks, #Specs, #Marks, #Scar, #Nose, #Cucumber, #Tomato, #Honey, #Line, #seedtotree, #seed2tree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,