ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்
நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும்.
எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு.
#குரு_பகவான், #குரு, #பகவான், #விதை2விருட்சம், #Guru, #Bhagvan, #Guru_Bhagavan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, seed2tree,