Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரகுல் பிரீத் சிங் அறைக்குள் கதறி அழுத அந்த ஒரு நிமிடம்

ரகுல் பிரீத் சிங் அறைக்குள் கதறி அழுத அந்த ஒரு நிமிடம்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், ரகுல் பிரீத் சிங். தமிழில் அதிக படங்களில் நடிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, எனக்கு மிகவும் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். வெறுமனே டூயட் பாடல் காட்சியில் ஆடிவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை’ எல்லா மொழிகளிலும் அதிக படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த சில படங்கள் சரியாக ஓடவில்லை.

எனவே, கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைக்கவில்லை. ஓரளவு இடைவெளி விட்டு புதுப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்தேன். ஓய்வு எடுப்பதற்கே நேரம் கிடைக்கவில்லை. இனி எல்லா வாய்ப்புகளையும் ஏற்க மாட்டேன்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங்கின் நெருங்கிய தோழர் ஒருவர் கசிய விட்ட தகவல் ஒன்று அது என்னவென்றால், தனது படங்கள் சரியாக ஓடாததால், ரகுல் பிரீத் சி்ங் அறைககுள் கதறி அழுதார். அவர் கதறி அழுத அந்த ஒரு நிமிடம் என் இதயம் வலித்தது என்பதே

#Rakul_Preet_singh, #ரகுல்_பிரீத்_சிங், #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply